Sunday, January 21, 2024

ஒன்றோ இரண்டோ 
முடிந்தால் நான்கோ ஐந்தோ கூட
குறைத்தே சொல்லுகிறேன்
பிறர் என் வயதை கேட்கும் போதெல்லாம்.

பூமி.சாமி.

Friday, January 19, 2024

படித்ததில் பிடித்தது

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…….
வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள்.
அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.
அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை.
புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.
நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். 
அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள்.
பேசிக்கொண்டே நடப்பது, 
பேச்சின் மூலம் அன்பை, 
நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும்.
இது ஒரு அருமையான அனுபவமும் கூட.
நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.
சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். 
இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். 
இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.
அதே போல ஒரு ஆணை நேசிக்க தொடங்கி விட்டால் அவனின் புறத்தோற்றம் பற்றி கவலை படுவதும் இல்லை என்பது நிதர்சன உண்மை.
இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும்.
உன் அழகு உருவத்தில் இல்லை, 
மனதில்தான் இருக்கிறது, 
உனது பேச்சுதான் உனக்கு அழகு, 
உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.
அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். 
அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்

Sunday, January 14, 2024

இனிய பொங்கல்
திருநாள் வாழ்த்துக்கள்💐💐💐

போகி பண்டிகை

இந்த போகியில் புகையில்லாமல்
எரித்து விடுத்தான்
நினைக்கிறேன்

என் கோபத்தை
என் பயங்களை
என் பொறாமையை
என் அகந்தையை
என் அகங்காரத்தை

மனதின் அடி ஆழத்தில் இருக்கும்
அன்பு பொங்கி எழ 
அழுத்தி இருக்கும் இவைகளை
எரித்து விடுத்தான் நினைக்கிறேன்.

பூமி.சாமி.









Friday, January 12, 2024

சில நேரங்களில், 
முல்லை கொடி என்று நினைத்து முற்க்கொடிக்கு தேரை கொடுத்து விடுகிறோம்.    
வள்ளலுக்கு எல்லா கொடியும் ஒன்றுதான், 
முற்க்கொடிக்கு எல்லா வள்ளலும் ஒன்றுதான், குத்தத்தான் செய்யும். 

பூமி.சாமி.

Wednesday, January 10, 2024

நீ பகிரவில்லை என்றாலும்
உன் வலியை
சுமக்கிறேன்

நீ வாங்க வில்லை என்றாலும்
என் ஆறுதலை 
உன்னிடம் கொடுக்கிறேன்

நீ சாயவில்லை என்றாலும்
என் தோள் கொடுக்கிறேன்

நீ சட்டை செய்யவில்லை என்றாலும்
உன் அருகிலேயே நிற்கிறேன் 

ஏன் என்றால் துயரங்களில்
உடனிருப்பதே அன்பென்று உணர்ந்திருக்கிறேன் நான்.

பூமி.சாமி.

Monday, January 8, 2024

Innocence to Intellectual is Easy
But
Intellectual to Innocence is Difficult.

-Boomi.Saami.