பேரன்பெல்லாம்
வேண்டாம்
அவ்வளவு அன்பை என்னால் கையாள முடிவதில்லை
அவ்வளவு அன்பை என்னால் திருப்பிச்செலுத்திட இயலவில்லை
புழங்கியது போக
மிச்ச அன்பெல்லாம்
பரண் மேல் கிடந்து
பாழாய்ப்போகும் சோகமெல்லாம்
பாவம்
இந்த பேரன்பில்தான்
நிகழ்கிறது
பின்னும்
கொடுப்பதாயின்
மனமுவந்து சிறிய அன்பினையேத் தாருங்கள்
எனக்கு
கைக்கு அடக்கமாய்
கையாள எளிதாய்
இன்னும்
நான் திருப்பி செலுத்திட ஏதுவாய்
இருக்கட்டும்
அவை
பேரன்பின்
பெரும் மூச்சு முட்டல்களின்றி
ஒரு சிறிய புன்னகையில்
ஒரு சிறிய நலன் விசாரிப்பில்
ஒரு சிறிய தலைகோதலில்
தொடரட்டும்
அவை
-ரிஸ்கா முக்தார்-