Saturday, September 9, 2023

வேஷம் வெளிப்பட

மழை பெய்து தான்
நரியின் சாயம் வெளுத்து போக
வேண்டும் என்று அவசியம் இல்லை
நரியை கொஞ்சம் கோபப்படுத்தி பாருங்கள்
வேஷம் வெளுப்பதோடு இல்லாமல்
முகமூடியும் கழண்டு போகும்.

பூமி.சாமி.


புகைப்படங்கள்

பகிரத் தான் எடுத்தேன்
பகிர மனமில்லாமல்
வைத்துக் கொள்கிறேன்
கண்ணுப்படும் என்று.

பூமி.சாமி.

Friday, September 8, 2023

உன் நினைவுகளை
மனதிலிருந்து 
அழிக்க முயன்று
அழிந்து போனது
அழிரப்பர்.

பூமி.சாமி.

Thursday, September 7, 2023

ஒரு சிந்தனை
இரண்டு மூன்று பாடல்கள்
ஒரு கதை
நிறைய புன்னகை 
ஒரு நகைச்சுவை
இயற்கை தரிசனம் 
பல நன்றிகள்
ஒரு பாராட்டு 
முடிந்தால் ஒரு உதவி
இவை இல்லாமல்
நகரும் நாள்
வாழப்படாத நாள்.


பூமி.சாமி.

Monday, September 4, 2023

ஆசிரியர் தின வாழ்த்துகள்

சிலைகள் உயிர்பெறுகையில்
உளிகளை மறக்கின்றன.

பூமி.சாமி‌

Wednesday, August 23, 2023

புகைப்படங்கள்

கல்யாணமா 100 புகைப்படங்கள் திருவிழாவா 50 புகைப்படங்கள்
கல்லூரி விழாவா 20 புகைப்படங்கள் காதணி விழாவா 50 புகைப்படங்கள் இப்படி எதையும் ரசிக்க முடியாமல் புகைப்படங்களாக புகைந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை

இப்படி நினைவுகள் மனப்படங்களாக மனப்பாடமாகமல்
புகைப்படங்களால் நிறைகிறது
வாழ்க்கை

வாழ்வில் ஓடி ஓரிடத்தில் நிற்கையில் வாழ்வை அசை போட மனப்படங்கள் தான் வேண்டுமே தவிர
புகைப்படங்கள் அல்ல புரிந்து கொள்ளுங்கள் புண்ணியவான்களே.


பூமி.சாமி.

காலக்கொடுமை

முல்லை கொடிக்கு 
முட்டாளாய்தான் தெரிகிறான்
பாரி.

பூமி.சாமி.