Thursday, October 6, 2022

Busy Busy Busy...

ஒரு புகைப்படம் எடுத்தால் உனக்கு பகிர்ந்து விடுகிறேன்

உபயோகமான தகவல் எனில் உடனடியாக முன்னீடு செய்கிறேன்

எச்சரிக்கை தகவல் எனில் முதல் உனக்குத்தான் சொல்கிறேன்

ஆனால்
தகவல் செல்லும் பாதை இப்படி நெரிசலாய் இருக்க
தகவல் வரும் பாதை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒன்றுமே இல்லை பெறுவதற்கு.

Monday, September 19, 2022

அந்த பருத்தி மூட்டை கூடோன்லேயே இருந்திருக்கலாம்

உனக்கு குறுஞ்செய்தி அனுப்ப நினைத்து, எழுதுகிறேன் 
பிறகு சிலவற்றை அழிக்கிறேன்
 மேலும் சிலவற்றை சேர்க்கிறேன்
 பிறகு சிலவற்றை நீக்குகிறேன்
 இது நடந்து கொண்டே இருக்கிறது கடைசியாய் முழுவதும் அழித்து 
எதுவுமே அனுப்பாமல் வைத்து விடுகிறேன் கைபேசியை.

-சாமி.

Sunday, September 11, 2022

கடவுளை நேரில் தரிசித்து இருக்கிறீர்களா?

எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது

அவருடன் இருக்கையில் என்னை மிக அன்பாக பார்த்துக் கொண்டார் 

என்னை கை பிடித்து நடக்க வைத்தார்
நா பழக்கி பேச வைத்தார்

நன்மை தீமைகளை சொல்லி கொடுத்தார் 

வான் இடிந்து வீழ்ந்தாலும் அச்சம் படாதே என்றார்

கருணை மழை பொழிந்தார்
தீயவைகள் அண்டாமல் பார்த்துக் கொண்டார்

கண்ணை இமை போல் காத்தார்
அறிவுரைகள் கூறினார் 
அன்பை பொழிந்தார் 
கண்டிக்கவும் செய்தார்
சிரிக்க வைத்தார்
அழவும் வைத்தார்

மொத்தத்தில் தியாகத்தின் மறு உருவமாய் இருந்தார்

என்ன செய்தாலும் தன் கரங்களில் எப்பொழுதும் என்னை அணைத்தே இருந்தார் 

எனக்கும். அவர் சென்றபின் தான் தெரிந்தது அவர் தான் கடவுள் என்று. 

அம்மா.


-சாமி.

Friday, September 9, 2022

பாராட்டு

பாராட்டுக்கு மனித மனம்
எப்பொழுதும் ஏங்கவே செய்யும்
மனிதர்களிடம் பிடித்த நல்ல விஷயங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனம் உவந்து பாராட்டுங்கள். அப்பாராட்டுகள் அவரை மேலும் வளர்த்து கொள்ளவும் அதை மேலும் பலருக்கு கொண்டு சேர்க்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

மனம் -மரம்

சில மரங்களை
தொட்டு பார்க்கிறேன் 
சிலவற்றை வருடி செல்கிறேன்
சில மரங்களை கட்டி அணைக்கிறேன் 
சிலவற்றை காதல் கசிந்துருகி
பார்த்து திளைக்கிறேன்
சில மரங்களை முத்தமிடுகிறேன்
நினைக்கும் போதெல்லாம்
என் மனதை நிறைத்து விடுகிறது மரம்.
ஏன் இந்த பந்தம் இன்று வரை புரியவில்லை எனக்கு.

-சாமி.

Wednesday, September 7, 2022

நீ தோல்வி அடையும் போதெல்லாம்
நான் உன்னோடு இருப்பேன்,

நீ வெற்றி அடையும் போது
அதை யாருடனும் கொண்டாடலாம்,
அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

-சாமி.


கறிப்வேப்பிலையை
முந்தி விடுகின்றனர் சில மனிதர்கள்
தூக்கி எறிவதில்.

-சாமி.