அதற்கு அவரிடம் இருந்தே அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், உலகில் அதைவிட மனதிற்கு மிக வேதனை தரக்கூடிய விடயம் இல்லை.
Thursday, July 23, 2020
உலகில் வேதனையான விடயம்.
ஒருவர் மேல் உள்ள அளப்பரிய அன்பினால் அவரை பற்றி எழுதுகிறோம் அல்லது பேசுகிறோம்,
Tuesday, July 21, 2020
வாழ்க்கையை எப்படி வாழ்வது!!!!
#ஜென்தத்துவம்!!!
#வாழ்க்கையை எப்படி வாழ்வது!!!!
இளைஞன் ஒருவன் " வாழ்க்கை வாழ்வது எப்படி" என்ற கேள்விக்கு விடையை அறிந்து கொள்ள ஜென்குருவை தேடி மலையேறி மூச்சிரைக்க நடந்து வந்தான்.
ஜென்குருவை சந்திக்கும் ஆர்வத்தில் ஒருவழியாக மலையேறி வந்து விட்டான்.
ஆஸ்ரமத்துக்கு வந்ததும் அங்கு ஒரு இளம் துறவி இருந்தார்.
அவரிடம் " வணக்கம் ஐயா வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காக குருவைப் பார்க்க வந்திருக்கிறேன் " என்றான்.
" ஓ..... அப்படியா குரு தியானத்தில் இருக்கிறார் . முன் அறையில் அமருங்கள் வருவார். " என்றவர் ஒரு கோப்பை நிறைய சூடான தேனீரை ஊற்றிக் கொடுத்தார் அந்த இளைஞகனுக்கு .
இயற்கை எழில் கொஞ்சும் மலையையும் , குளிர்ந்த காற்றையும் ,சில்வண்டுகளின் சத்தத்தில் குயிலோசையையும் மடாலயத்தின் மௌனத்தையும்,ரசித்துக் கொண்டிருந்ததில் சூடான தேனீரை குடிக்க மறந்தே போய்விட்டான் . தேனீர் ஆறிபோய்விட்டது.
சிறிது நேரத்தில் குரு அவனை நோக்கி வந்தார் . அவன் எழுந்து வணங்கினான் .
குருவின் கண்களில் கனிவும் மென்மையும் தெரிந்தது.
"வாழ்க்கையை எப்படி வாழ்வது? என்ற கேள்விக்கு விடை கேட்டு வந்தேன்" என்றான் .
குரு லேசாக புன்னகை செய்தார் .பின்னர், " உன் கோப்பையில் உள்ள தேனீர் ஆறிப்போய் இருக்கிறதே!. அதை வெளியில் கொட்டிவிடு " என்றார்.
அவன் அப்படியே செய்தான். பின்னர் குரு அந்த கோப்பையில் சூடான தேனீரை ஊற்றி நிரப்பினார்.
அவன் அதை குடிக்க ஆரம்பிப்பதற்குள் குரு விடை கூறாமல் மீண்டும் தியானம் செய்ய சென்றுவிட்டார் .
அவன் மிகுந்த ஏமாற்றத்துடன் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான். அப்போது மீண்டும் அந்த இளம் துறவியை பார்த்தான்.
"உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததா?" என்று கேட்ட துறவியிடம் நடந்ததை கூறினான்.
அதற்கு அந்த துறவி "குரு உங்கள் கேள்விக்கு சரியான பதிலை கூறிவிட்டாரே"!! என்றார்.
"ஜென் என்றால் அந்தந்த நொடியில் வாழ்வது என்று பொருள். மனம் என்னும் கோப்பையில் பழைய ஆறிப் போன எண்ணங்களை கொண்டு வாழாமல் , இந்த அப்பொழுதில் சுடச்சுட வாழ்வதுதான் வாழ்க்கையை வாழும் முறை . இதைத்தான் குரு உனக்கு செய்து காட்டி இருக்கிறார்."
வாழ்க்கையை எப்படி வாழ்வது என்னும் முறையை புரிந்து கொண்டான் . அந்த நொடியில் வாழத்தொடங்கினான் மகிழ்ச்சியுடன் ... !!!
கோபம் உறவை கொல்லும்
அடித்தால் அடிப்பட்டவனுக்குதானே வலிக்கவேண்டும்,
ஆனால் கோபத்தில் திட்டினேன்
இருவருக்குமே வலிக்கிறது இங்கு.
சாமியின் சிந்தனை.
Sunday, July 19, 2020
Saturday, July 18, 2020
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை"
கவிஞனோ அல்லது புலவனோதான்
இந்த பலமொழியை கண்டுபிடித்து இருக்கவேண்டும்.
சாமியின் சிந்தனை
தஸ்தாயெவ்ஸ்கி பற்றி S. இராமகிருஷ்ணன்
தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும். தஸ்தாயெவ்ஸ்கியைப் படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமா அடையாளம் காட்டப்படுகிறது. நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது. நம்மில் பெரும்பான்மையினரின் பிரச்சனைகளே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்களின் மனஇயல்பு. அதாவது பேசமுடியாத ஆனால் நிறைய பேச வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்களே அவரது முக்கிய கதாபாத்திரங்கள்.
- எஸ்.ராமகிருஷ்ணன்
Thursday, July 16, 2020
GIVE HONEY
அக்கறை காட்டுவதில் அமுதசுரபி நீ,
அன்பில் ஈர்ப்பதில் பூமித்தாய் நீ,
அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் உள்ளது என உணர்த்தியவள் நீ,
அப்படி பார்க்கையில் பேரழகி நீ,
அக்கறை என்னும் அமிழ்தினில் மூழ்கடிகத்தவள் நீ,
சில நேரங்களில் அது கிடைக்காமல்
என்னை அதிகம் அழ வைத்தவளும் நீ,
நம் குடும்பம் உன்னை சூரியனாய் வைத்து சுற்றிவர உன் அக்கறை என்ற ஈர்ப்புவிசை தான் காரணம்,
அதில் பல நேரங்களில் மெர்குரியாய் இருக்க ஏங்கி இருக்கிறேன் நான்,
உன் அக்கறையை பெறும் பொழுது உச்சக்கட்ட பாசமும், அது கிடைக்காத பொழுது உச்ச கோபமும் வருகிறது எனக்கு,
எனக்கு ஒரு ஆசை உண்டு அது உன் அக்கறை மழையில் வாழ்நாள் எல்லாம் நனைய வேண்டும் என்பது,
ஒரு பேராசையும் உண்டு அது ...........
Subscribe to:
Posts (Atom)