சாமியின் சிந்தனை.
Friday, July 3, 2020
ஆசை
முழுநிலவொளியில் முழு இரவு முழுவதுமாய் முடிந்த அளவு நடந்தே
ரசிக்க நினைக்கிறது மனசு.
பின் குறிப்பு: முடிந்தால் மதி மயக்கத்துடன் சிறிது மது மயக்கமும் கூட.
சாமியின் சிந்தனை.
Wednesday, July 1, 2020
எங்கும் உன் முகமே
கண்ணாடியில் என் முகம் பார்க்க நினைத்து,
உன் முகத்தில் என் முகம் பார்த்தேன்
அங்கும் தெரிந்ததும் உன் முகமே.
சாமியின் சிந்தனை.
மரம் மகத்தானது.
வெட்ட நினைத்து குனிந்து வேர் தேடி சென்ற என்னை,
என் தலை வருடி தன் சிறுகிளைகளால் ஆசிர்வதித்தது மரம்.
சாமியின் சிந்தனை.
Monday, June 29, 2020
சில உறவுகள் மற்றும் சில நட்புகள்
தடம் பார்த்து நடந்தாலும் பாதத்தை
பதம் பார்த்து விடுகின்றன சில முட்கள்.
சாமியின் சிந்தனை.
Saturday, June 27, 2020
Sunday, June 21, 2020
உலக தந்தையர் தினம்
ஒருநாள் கொண்டாடக்கூடிய உறவா அது, வாழ்வின் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டிய உன்னத உறவு அது,
உழைத்து உழைத்து தன்னை தேய்த்து நம்மை உயர்த்தியவர்,
தான் பெறமுடியாத கல்வியை, வசதியை, வாழ்க்கையை, தன் வாழ்க்கையை வயதை இழந்து வாங்கி கொடுத்தவர்,
எப்பொழுதும் நம் மகிழ்வையே தன் மகிழ்வாக நினைத்து வாழ்பவர்,
கண்டிப்பை சொல்லில் வைத்து கனிவை மனதில் வைத்திருப்பவர்,
நாம் வாழ்வில் ஓங்கி வளர தன்னை மறைத்து தாங்கிப்பிடித்து வேராய் இருப்பவர்,
எனக்கு மிகவும் பிடித்த சொல் 'அப்பா'
பிடித்த செயல் 'உன் கண்டிப்பு',
தந்தையே உன் மறுபெயர் உழைப்பு, உணர்வு, உண்மை, உன்னதம், உயிர்ப்பு எல்லாவற்றிற்கும் மேல் என்னுயிர் உருவாக்கிய என்னுயிர் நீ.
சாமியின் சிந்தனை.
Subscribe to:
Posts (Atom)