Showing posts with label வகுப்பறை ஆசிரியர் மாணவர். Show all posts
Showing posts with label வகுப்பறை ஆசிரியர் மாணவர். Show all posts

Thursday, December 29, 2022

வகுப்பறை

சில நேரங்களில் அமைதியாய் கற்றல் நிகழும்

சில நேரங்களில் வாக்குவாதங்கள் நிகழும்

சில நேரங்களில் சிரிப்பொலி சிறப்பாய் இருக்கும்

சில நேரங்களில் உணர்வின் மிகுதியால் அழுகையும் நிகழும்

சில நேரங்களில் வாக்குவாதங்கள் சண்டையில் முடியும்

எது எப்படி இருந்தாலும்
கேள்வி கணைகளுக்கு பஞ்சமில்லை இங்கு 

சில நேரங்களில் மாணவர் ஆசிரியர் ஆவதும்
ஆசிரியர் மாணவர் ஆவதும் உண்டு

எப்படி இருந்தாலும் கற்றல் நிகழும் இங்கு 

உன்னை உயர்த்தி
என்னை உயர்த்தி
உலகையும் உயர்த்துவதால்
என்றுமே அந்த வகுப்பறை தான்
உயர்ந்தது என்பதில் எள்ளளவும் 
சந்தேகம் இல்லை எனக்கு.

-சாமி.