சில நேரங்களில் வாக்குவாதங்கள் நிகழும்
சில நேரங்களில் சிரிப்பொலி சிறப்பாய் இருக்கும்
சில நேரங்களில் உணர்வின் மிகுதியால் அழுகையும் நிகழும்
சில நேரங்களில் வாக்குவாதங்கள் சண்டையில் முடியும்
எது எப்படி இருந்தாலும்
கேள்வி கணைகளுக்கு பஞ்சமில்லை இங்கு
சில நேரங்களில் மாணவர் ஆசிரியர் ஆவதும்
ஆசிரியர் மாணவர் ஆவதும் உண்டு
எப்படி இருந்தாலும் கற்றல் நிகழும் இங்கு
உன்னை உயர்த்தி
என்னை உயர்த்தி
உலகையும் உயர்த்துவதால்
என்றுமே அந்த வகுப்பறை தான்
உயர்ந்தது என்பதில் எள்ளளவும்
சந்தேகம் இல்லை எனக்கு.
-சாமி.
No comments:
Post a Comment