Friday, December 30, 2022

நேற்று, நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்றோம் 
இன்று, அவர் இல்லாமல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்

நேற்று, வாழ்நாள் முழுவதும் உன்னோடு
இருப்பேன் என்றோம் 
இன்று, அவரை நீங்கி வெகுதூரத்தில் நாம்

நேற்று, உன்னோடு பேசாமல் தூக்கம் வராது என்றோம் 
இன்று, அவரோடு வருடக்கணக்கில் பேசாமல் நன்றாகத்தான் தூங்குகிறோம்

நேற்று, நீங்கள் செய்த உதவியை காலம் 
முழுவதும் மறக்க மாட்டேன் என்றோம் 
இன்று, அவர் யார் என்பதே மறந்து விட்டது

காலம் நேற்றை கலைத்துதான்
இன்றைய உருவாக்குகிறது
இன்றை கலைத்துதான் நாளை உருவாக்கும்

காலமும் கலைத்தலும் தான்
நிரந்தரம்
மற்றவை எல்லாம் மாற்றத்திற்கு உள்ளாகும் என்பதுதான் மந்திரம்.

-சாமி.



No comments:

Post a Comment