Showing posts with label உழைப்பு உயர்வு உன்னை நம்பு. Show all posts
Showing posts with label உழைப்பு உயர்வு உன்னை நம்பு. Show all posts

Sunday, February 26, 2023

இங்கு கலங்குவதாலோ கவலைப்படுவதாலோ எதுவும்
 நடக்கப் போவதில்லை 

ஒருநாள் ஒருபடியேனும் உருப்படியாய் ஏறு 
ஒவ்வொரு நாளும் தவறாமல் ஏறு
சறுக்கிடும் வழுக்கிடும் கலங்காதே கவலைப்படாதே கற்றுக்கொள்
கரை சேர்வாய் 

இங்கு தோல்வி என்ற ஒன்று இல்லை எல்லாம் வெற்றிக்கான பட்டறிவு படிகள் தான் 

வெற்றியின் வாயில் காவலன் தோல்விதான் 
அவனை சந்திக்க நேர்ந்தால்
நீ வெற்றியின் வாயிலில் இருக்கிறாய் என்று உணர்ந்து கொள்

எல்லாம் உன்னுள் இருக்கிறது 
உன்னை நம்பு உழைத்திடு
உலகை உன்னதாய் ஆக்கிடு.

-சாமி.