Showing posts with label அன்பு செய்தல். Show all posts
Showing posts with label அன்பு செய்தல். Show all posts

Tuesday, December 12, 2023

எனக்கு தெரிந்ததைதான் நான் செய்ய முடியும்

உன்னை வெறுக்கத்தான் நினைக்கிறேன்
நீ செய்த நன்மையெல்லாம்
கண்முன் வந்து போகிறது

உன்னிடம் அன்பாய் இருக்க நினைக்கிறேன்
நீ செய்த தீமையெல்லாம்
நினைவில் வந்து போகிறது

என்ன செய்வது என்று
தெரியாமல்
உன்னிடம் அன்பாகவே இருந்து விடுகிறேன்

ஏனென்றால்
எனக்கு சரியாய் செய்ய தெரிந்தது
அது மட்டும்தான்.

பூமி.சாமி.