Monday, January 2, 2023

நம்மிடம் எல்லாம் இருந்தும் 
மனதில் ஒரு வெறுமை
திருப்தியின்மை
போலித்தனம்
இவையெல்லாம் நாம் உணர்கிறோம்

இது ஏன்

மனிதர்களிடம் ஆத்மார்த்தமான எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பும் தொடர்பும் இல்லாததே என நான் நினைக்கிறேன்

இப்பொழுதெல்லாம்
அன்பு பாசம் அக்கறை எல்லாம் 
வெறும் வார்த்தைகளில் மட்டுமே
வெளிப்படுகிறது
உள்ளார்ந்து மனதில் இருந்து வருவதில்லை.

நம் முன்னோர்கள் இப்படியில்லை
அவர்களிடம் எதுவும் இல்லையெனினும்
அன்பான வெள்ளந்தியான
மனதுடன் மற்ற மனிதர்களுடன் நெருக்கமான எதிர்பார்ப்பில்லாத
ஆத்மார்த்தமான தொடர்பில் இருந்தனர்
அவர்களின் வாழ்விலிருந்து
கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.


-சாமி.




No comments:

Post a Comment