இடுப்பிலும் நிற்காது
பட்டணும் இருக்காது
அருணா கயிறுக்கும் சிக்காது
மதிய சத்துணவில் கொடுத்தது
உலக மண்ணே ஒட்டினாலும் ஒன்னும் ஆகாது
ஒரு கையை எப்பொழுதும் ஒதுக்கி விட வேண்டும்
அதை விழாமல் பிடிப்பதற்கு
இரு மஞ்சப்பை சாமான்கள் ஒரு பையில் கொள்ளும்
விளையாட்டு சாமான்கள்,
பலுங்கி, பம்பரம், எல்லாம் அதன் உள்ளே ஐக்கியம்
நெல்லிக்காய், இலந்தை, நாவல் பழம், விளாம்பழம், கடலை, தீபாவளி முறுக்கு, சீசனுக்கு ஏற்றார் போல் பையை நிரப்பிக் கொள்ளும் பாங்கான காக்கி கால் சட்டை
அம்மா கடைக்கு அனுப்பும்போது வெங்காயம், தக்காளி, மளிகை, என நிரப்பி இருபிள்ளைதாட்சி போல்
காட்சி தரும் கால் சட்டை
எத்தனையோ அழுக்கு, எண்ணெய் பசை எதனாலும் அதன் கலரை மாற்ற முடியாது
அதற்கு ஆகாத ஒரு பொருள் உண்டென்றால் அது தண்ணீர் தான்
அடுத்த முறை சத்துணவில் புதிய கால் சட்டை கொடுக்கும் வரை அதுதான் முழு நேர சட்டை எனக்கு
முழுக்கால் சட்டை வித வித வண்ணத்தில் போட்ட பின்பும் இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது அந்த காக்கி கால் சட்டை
-சாமி.
No comments:
Post a Comment