இன்னமும் உன் கைப்பற்றி நடப்பதால்தான் நான் ஒழுங்கான வழியில்.
நீ என்னை 'சாமி' என்று கூப்பிடும் குரல் தான் என் சாமியின் குரல்
ஓராயிரம் கோவிலில் இரக்க மூடியாத
என் மனபாரம் ஒரு நொடியில் உன் பாதம் தொட இறங்கி போகும்.
பத்து மாதங்கள் வயிற்றிலும் வாழ்க்கை முழுவதும் மனதிலும் எங்களை சுமந்தவள் நீ
ஆனால் உன்னை வார்த்தையில் மட்டுமே சுமக்கிறேன் நான்.
ஒரிரு நாட்கள் நீ அணிந்த செயினும் வளையலும் ஓராயிரம் நாள் வங்கியில் இருந்து என்னை படிக்க வைத்தன.
வாழ்நாள் முழுவதும் எங்களை தாங்கி பிடித்த அன்பை நிறுத்தி கொண்டாய்.
மீத வாழ்நாள் முழுவதும் எங்களை தாங்கி பிடிக்க உன் நினைவுகளை விட்டு சென்றாய்
வலிமாத்திரை போட்டு உன் வலியை போக்கி கொண்டாய்.
மாத்திரை போட்டாலும் தீராத வலியை
எங்கள் வாழ்நாள் முழுவதும் தந்து சென்றாய்.
சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாகப்தம் ஆகி சாகா நினைவாக என்று என்றும் இருப்பாய் எங்கள் மனதில்.
உன் அன்பு மகன் சாமி.
No comments:
Post a Comment