Wednesday, May 31, 2023

இலக்கு  முக்கியமல்ல
இலக்கை நோக்கி போகும் பயணம்  முக்கியமானது.

பூமி.சாமி.


Tuesday, May 30, 2023

முன்பெல்லாம் வாழ்க்கையில்
ஆங்காங்கே நடிப்பு இருக்கும்

இப்பொழுது நடிப்பிற்க்குள்
ஆங்காங்கே வாழ்க்கை இருக்கிறது.


Sunday, May 28, 2023

மறதியைப்போல் மாமருந்து இல்லை


வயது அதிகமாக
மனம் மென்மையாகும் 
காயங்கள் அதிகமாகும்
அதை மறக்க
மறதி அதிகமாகும்.

பூமி.சாமி


Monday, May 22, 2023

தூரத்திலேயே இருந்து கொள்கிறேன்
நீ கானல் நீர் ஆகுவது தெரிகிறாய்
அருகில் வந்தால் காணாத நீராகிறாய்.

-சாமி.

Monday, May 15, 2023

மூட்டை மூட்டையாய் முகமூடிகளை
தூக்கி அலைகிறோம்
முகத்தை மறைத்துக் கொள்ள.

-பூமி.சாமி.

Tuesday, May 9, 2023

வாழ்த்துக்கள்

உன் நம்பிக்கைக்கு காரணமாய்
எங்கள் வார்த்தைகள் இருந்திருக்க கூடும்

உன் முயற்சிக்கு பின் எங்கள் ஊக்கம் இருந்திருக்க கூடும்

உன் அறிவு முதிர்ச்சிக்கு எங்கள் அனுபவம் காரணமாய் இருந்திருக்க கூடும்

உன் வாழ்விற்கு வழியாய் ஒளியாய்
எங்களால் வந்த கல்வி இருக்கக்கூடும்

இவைவெல்லாம்
ஒன்றுமே இல்லை 
உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கு முன்

சென்று வாருங்கள் வென்று வாருங்கள்
வாழ்த்துக்கள்.


Wednesday, May 3, 2023

இருக்கும்போதே கொண்டாடுவோம்

என் இறுதி ஊர்வலத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்

 இப்பொழுது வாருங்கள் பேசிக்கொண்டு காலார நடப்போம் 

எனக்கு உங்கள் இறுதி மரியாதை வேண்டாம் 
இப்பொழுது என்னை மரியாதையுடன் நடத்துங்கள் போதும்

அப்போது என் மீது அழுது புரள வேண்டாம்
 இப்பொழுது என்னோடு சிறிது நேரம் சிரித்து பேசுங்கள் போதும்

 அப்போது என்னால் கேட்க முடியாத ஆயிரம் புகழ்  மொழிகள் வேண்டாம் 

ஒன்றிரண்டேனும் இப்பொழுது என் காதில் கூறுங்கள் போதும்

உங்கள் மலர் மாலைகள் வேண்டாம் 
இப்போது என்னை மலர்ந்த முகத்தோடு அணுகுங்கள் போதும்

அப்போது என்னை விட்டுப் பிரிந்து செல்கிறாயே என்று அழுது அலற்ற வேண்டாம் 
இப்போது 'நான் உன்னோடு இருக்கிறேன் 'என்ற கூறுங்கள் அது போதும்

அப்போது புகைப்படம் ஒட்டி வருந்துகிறேன் என்ற வார்த்தைகள் வேண்டாம்
இப்போது உயிர் படமாய் உன்னோடு இருக்கிறேன் என் உணர்வை மதி அது போதும் 

 நான் இருக்கும் நாட்களில் இதுவெல்லாம் செய்தால் 
என் இறுதி நாள் தள்ளிப்போகும் அது போதும் எனக்கு 

என் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டாம் நீங்கள்.



-பூமி.சாமி.