Saturday, June 19, 2021

ஒரு ரூபாய்

பல ஆயிரங்கள் பார்த்த பின்னும்
குழந்தை பிராயத்தில் பாட்டி
கொடுத்த 'ஒரு ரூபாய்' மனதை விட்டு
இறங்கி மறுக்கிறது.

-சாமி.

பிரசவம்

அதிகாலை 3 மணி
தூக்கம் வரவில்லை
புரண்டு படுக்கிறேன்
எழுந்து உட்காருகிறேன்
எழுந்து நடக்கிறேன்
மீண்டும் திரும்பி படுக்கிறேன்
ஊகூம் இப்படியே போகிறது
காலை 6 மணி
பிரசவிக்கிறேன் ஒரு
கவிதையை.

-சாமி.


Wednesday, June 16, 2021

#நாவடக்கம்..🙂

*_படித்ததில் பிடித்தது_*

👇 #நாவடக்கம்..🙂

முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் பண்டிதர்..

அவரும் .. *முடிவெட்ட  நாலணா.. சவரம் பண்ண  ஒரணா சாமி !* என்று பணிவுடன் கூறினார்..

 பண்டிதர் சிரித்தபடியே,
*அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு* என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் பண்டிதர்..

வயதில் _*பெரியவர்*_ என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..

 வேலையை ஆரம்பித்தார் நாவிதர்..

_*நாவிதர் கோபப்படுவார்*_ என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு.. சற்று ஏமாற்றந்தான்..

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்..

*ஏன்டாப்பா.. உன் வேலையோ..!  முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம..* *உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி  "நாவிதன்னு" சொல்றாங்க..?*

இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் பண்டிதர்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை..
*நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை  பேசுறதனால தான்..!  நாங்க நாவிதர்கள்..*
*எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..?*

இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது..

அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. *இதென்னப்பா, கத்தரிக்கோல்னு  சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..?*

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து..
 
*சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..* என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்..

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்..

*எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..?.!*

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது..

அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம்..

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்..

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்..

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்..

பண்டிதரின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்..
*சாமிக்கு இந்த மீசை வேணுங்களா..?*
பண்டிதர் உடனே, *ஆமாம்* என்றார்..

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின்  மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து..
*மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க..* என்றார்

பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்..

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்..

நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்..

அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார்,
*சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..?*

இப்போது பண்டிதர் சுதாரித்தார்..
_வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்..
*இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..* என்றார் பண்டிதர்..

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்..

*சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்..*

*சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..* என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்..

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்..

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல்..

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது..

கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு.. விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்..

*நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் -  அந்தஸ்தும் - பொருளும் -  மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல..*

*இதை உணராதவர்கள் -
 இப்படித்தான் அவமானப்பட நேரும்..

Saturday, June 12, 2021

மழை

நுகர மண்வாசனை, காண தங்க மழைத்துளி, உணர குளிர்ந்த காற்று, 
கேட்க சர சர எனும் சாரல் ஓசை, சுவைக்க மணக்கும் தேனீர்.
உண்மையில் மழை பெய்கையில் தேனீர் அருந்துதல் ஒரு தவம்.

-சாமி.

உதவி செய்

உதவி செய்யவோ அல்லது பரிசளிக்கவோ நினைத்தால் உடனே செய்துவிடுங்கள்,
இல்லையேல் 
மனம் பல பணக் கணக்குகளையும் அதை செய்யாமல் இருப்பதற்கான நியாயப்படுத்துதலையும் கொண்டு அதை நிறுத்திவிடும்.

-சாமி.

இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ.....

எனக்கு மிகவும் பிடித்தவை.
மரம், மழை, பூமி, கதிரவன், நிலா, நட்சத்திரங்கள், கடல், குழந்தை, யானை.............இப்படி போய்க் கொண்டே இருக்கிறது மனிதனை தவிர.

-சாமி.

The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி

மகிழ்ச்சிக்கான பாதை எது?

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா?

இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “The way to happiness ” இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

“The way to happiness ‘ புத்தகத்தின் ஸ்பெஷாலிட்டி, இதில் விரிவாக்கப்பட்டுள்ள 21 வழிமுறைகள். “இவற்றை உணர்ந்து பின்பற்றத் தொடங்குவதுதான் உண்மையான சந்தோஷத்துக்கான அடித்தளம்’ என்று ஆசிரியர் ரான் ஹப்பார்ட் அடித்துச் சொல்கிறார்.

சந்தோஷத்தின் வழி’யாக அவர் முன்வைக்கும் அந்த எளிய சூத்திரங்கள், இங்கே சுருக்கமாக:

1. முதலில், உடம்பைப் பார்த்துக்கோங்க, சுவர் இருந்தால்தான் சித்திரம்.

2. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள்.

3. உங்களுடைய உறவுகளுக்கு, நண்பர்களுக்கு, பிஸினஸ் கூட்டாளிகளுக்கு விசுவாசமாக இருங்கள்.

4. உங்கள் வயசு எதுவானாலும் பரவாயில்லை, குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்.

5. பெற்றோரை மதியுங்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.

6. “அடுத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல முன் உதாரணமாகத் திகழ்வேன்’ என்று உங்களுக்கு நீங்களே உறுதி சொல்லிக் கொள்ளுங்கள்.

7. உண்மை எத்தனை கசப்பானாலும் பரவாயில்லை, ஏற்றுக்கொள்ளுங்கள்.

8. யாரையும் கொல்லாதீர்கள், வார்த்தைகளால்கூட!

9. சட்டவிரோதமான எதையும் செய்யாதீர்கள், அதனால் எத்தனை லாபம் வந்தாலும் சரி!

10. பாரபட்சமின்றி சமூகத்தில் ஒரு சமநிலை வருவதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பியுங்கள்.

11. ஒருவர் நல்லது செய்யும் போது, ஏதாவது சொல்லி அவரது முயற்சியைக் கெடுத்துவிடாதீர்கள்.

12. உங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உங்களுடைய பொறுப்பு.

13. திருடாதீர்கள்.

14. எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருங்கள்.

15. சொன்ன வாக்கை மீறாதீர்கள்.

16. “சும்மா இருப்பதே சுகம்’ என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.

17. கல்வி என்பது முடிவற்றது, எந்நேரமும் மாணவராகவே வாழவேண்டும்!

18. அடுத்தவர்களுடைய மத உணர்வுகளை மதியுங்கள், கேலி செய்யாதீர்கள்.

19. மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ, அதை நீங்களும் அவர்களுக்குச் செய்யாதீர்கள்.

20. அதேபோல், அவர்கள் உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள்.

21. இந்த உலகம் வளங்களால் நிறைந்தது, அள்ளி எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்...