Friday, August 12, 2011

பாசம்

பக்கத்தில் இருக்கும் உதவியவனுக்கு
நன்றி உணர்வை காட்டமறந்த நான்,
பஸ் ஏறி ரயிலேறி
கோயில் கோயிலாய்
நேர்த்திகடன் செலுத்தினேன்

மனைவி

கணவனே கண் கண்ட தெய்வம் ,
பக்தை சொல்வதை தெய்வம் கேட்க்கும்வரை.

Thursday, July 28, 2011

மனைவி

ஆண்கள் எல்லோர்க்கும் தாயே முன்னறி தெய்வம்,
திருமணம் ஆகும்வரை.

Monday, July 25, 2011

உடன்பிறப்பு

உடன் பிறந்து தனிமையாய் இருப்பதைவிட

தனிமையாய் பிறப்பதே மேல்.

Monday, July 18, 2011

ஞானம்

மனிதனைவிட
மரம் மேலானது
மன அமைதிக்கு.

Sunday, May 8, 2011

தஞ்சாவூர் டு காரைக்கால்

சில இடங்களுக்கு நாம் சென்றால் அங்குள்ள

சிலருக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகும் ,

சில இடங்களுக்கு நாம் செல்லும்போது

நமக்கு மகிழ்ச்சி இல்லாமல் போகும் ,

மேறசொன்ன இரு இடங்களுக்கும்

நாம் செல்வதை குறைப்பது நமக்கு நல்லது .

Tuesday, March 15, 2011

ஜப்பான் சுனாமி

ஒய்வு இல்லாமல் உழைத்து உழைத்து

ஓடாய் போன எம் மக்களுக்கு நிரந்தர

ஒய்வு கொடுக்க நினைத்தாயோ