Thursday, April 23, 2026

நன்றி மறத்தல்

நமக்கு கிடைத்த 
அன்பை
அக்கறையை
உதவியை
காலத்தை காரணம் காட்டி 
கடந்தும் மறந்தும் போகுகிறது மனசு.

-பூமி.சாமி.

Tuesday, March 31, 2026

நீ அன்று என் கரங்களை
உதறிய வேளையில் 
நம் காதல் நம்மை இருக்கமாய்
பிடித்து கொண்டது.

-பூமி.சாமி.

Saturday, March 28, 2026

YOU VALUE THEM INFINITY 
THEY VALUE YOU ZERO
FINALLY YOUR RELATIONSHIP BECOME ZERO.

Friday, February 27, 2026

மலையிலிருந்து இறங்கியவுடன் 
நினைவுகள் எல்லாம் 
ஏறி அமர்ந்து கொள்கிறது
மனதில்.

-பூமி.சாமி.
சில நேரங்களில் 
இருப்பவைகளையும்
இருப்பவர்களையும்
தாண்டி 
இல்லாதவர்களையும்
இல்லாதவைகளையும்
நினைத்து கணக்கிறது மனசு.

-பூமி‌.சாமி.

Wednesday, February 18, 2026

அடிமையாய் இருக்கிறோம் 
என்று உணராமலேயே
மீசையை மட்டும் முறிக்கிக் கொண்டு 
முடிந்து விடுகிறது 
சிலரது வாழ்க்கை.

-பூமி.சாமி.

Monday, February 9, 2026

எப்படி அந்த அழகிய ரோஜாவை பறித்து 
கடவுளுக்கு காணிக்கை ஆக்க முடிந்தது சகி,
கடவுளிடம் கேட்டிருந்தால் கூட பறிக்க வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பார்.

-பூமி.சாமி.