Wednesday, February 18, 2026

அடிமையாய் இருக்கிறோம் 
என்று உணராமலேயே
மீசையை மட்டும் முறிக்கிக் கொண்டு 
முடிந்து விடுகிறது 
சிலரது வாழ்க்கை.

-பூமி.சாமி.

Monday, February 9, 2026

எப்படி அந்த அழகிய ரோஜாவை பறித்து 
கடவுளுக்கு காணிக்கை ஆக்க முடிந்தது சகி,
கடவுளிடம் கேட்டிருந்தால் கூட பறிக்க வேண்டாம் என்று தான் சொல்லி இருப்பார்.

-பூமி.சாமி.

Sunday, February 8, 2026

நீ எவ்வளவு 
கொடுத்திருக்கிறாய் எனக்கு

அவமானம் 
அலட்சியம் 
ஏமாற்றம் 
அவமதிப்பு 
திமிர்த்தனம்

ஆனால் 
உனக்கு கொடுக்க 'அன்பு '
மட்டுமே இருக்கிறது என்னிடம்.

யாரிடம் என்ன இருக்கிறதோ
அதைதானே கொடுக்க முடியும்.

-பூமி.சாமி.



Tuesday, January 27, 2026

நம் கை கொடுக்கும் கையாகவே 
இருக்கவேண்டும் என்பதை சிலர் 
தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றனர்

மற்ற கைகள் பிச்சை எடுக்கும் கைகளாகவே இருக்க வேண்டும் 
என்ற தவறான அர்த்தத்தில்.

-பூமி.சாமி.

அகத்தின் அழுக்கு முகத்தில் தெரிகிறது 
அழுக்கை மறைத்து அழகாய் பேசுகிறது நாக்கு.

-பூமி.சாமி.

Saturday, January 24, 2026

படித்ததில் பிடித்தது: Emotional Manipulation

ஒருவர், உங்களை அவரது தேவைகளுக்காக நன்றாக பயன்படுத்திக் கொள்வார்
உங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்

உங்கள் மீது அன்பு அக்கறை இருப்பது போல் நடிப்பார்
உங்களைப் பிரிந்து போகுவும் விடமாட்டார்
எதன் பொருட்டும் உங்களுடன் 'Commit' ஆக  மாட்டார் 
உங்களைப் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வார்
அவரை பற்றி எதுவும் சொல்ல மாட்டார்

மொத்தத்தில் உங்களை 'Emotional Manipulation' செய்வார்
இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் இவர்களை 'Emotional ___________' என்றும் சொல்வது உண்டு 
இவர்களை விட்டு விரைவில் 
நீங்கள் ஒதுங்கி விடுவது
 உங்களுக்கும் உங்கள் வாழ்விற்கும் நன்று.

Thursday, January 15, 2026

படித்ததில் பிடித்தது: பேசுங்கள், பேச்சு சிகிச்சை

மனிதன் toxic இல்லை. பேச வாய்ப்பு கிடைக்காததால் உருவாகிற போராட்டம். 

அவர்களை பேச விட்டு பாருங்களேன். பேச விடுவது என்பது

திருத்துவதற்காக இல்லை. 
வாதிக்க அல்ல.
தீர்ப்பளிக்க அல்ல.
பேசுவதற்காக மட்டும்.

ஏனென்றால்
பேச்சு சத்தம் அல்ல.
பேச்சு சிகிச்சை.

மனித சமுதாயம் உருவானது, 
அழுத்தத்தை உள்ளே வைத்துக் கொள்ள அல்ல —
வெளியிட.

உணர்வுகள் உடலிலிருந்து வெளியேறுவதற்கான
மிகப் பெரிய வழி…
பேசுதல்.

ஒருவர் பேசும்போது
கோபம் குறையும்,
பயம் கரையும்,
மனம் லேசாகும்,
உடல் சமநிலைக்கு வரும்.

பலர் பிறரை காயப்படுத்துவது
அவர்கள் கெட்டவர்கள் என்பதால் அல்ல…
அவர்களுக்கு பேச இடம் கிடைக்காததால்.
Toxic என்று பெயர் வைக்காமல் அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்தால், அவர்களும் இனிமையானவர்களே. 

கடுமையான வார்த்தைகளுக்குள் கூட
ஒரு காயமடைந்த மனம்
“என்னை கேளுங்கள்” என்று
கேட்கிறது.

நான் சமீபத்தில் சந்தித்த ஒரு மனிதர் —
ஒரே குடும்பம்,
ஆனால் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு சிந்தனை.

அவர் பேச முயன்றால்
“பேசாதே… அது வலிக்குது”
என்று சொல்லப்பட்டது.

அவர் மௌனமானார்.

அந்த மௌனம்
அழுத்தமாக மாறியது.
அழுத்தம்
உடல் நோயாக மாறியது.
பக்கவாதம் போன்ற அறிகுறிகள் வந்தன.

அவருக்கு
பேச இடம் கொடுக்கப்பட்டது —
பல மணி நேரங்கள்,
நாட்கள்…

அப்பொழுது
அவரது முகம் மாறியது.
உடல் சோர்வு குறைந்தது.
மனம் தெளிந்தது.

பிரச்சினைகள் போனதாலல்ல…
உணர்வுகள் வெளியேறியதால்.

பேச்சு பிரச்சினை அல்ல.

மௌனம் தான் பிரச்சினை.

ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை.
ஒப்புக்கொள்ள வேண்டியதில்லை.
கேட்பது போதும். உணர்வுகள் தினந்தோறும் வெளியேற்றப்பட வேண்டும். 

நோய் என்பது உணர்வுகள் வெளியேறாததால் வருவதே அன்றி, உடலில் எந்த சிக்கலும் இல்லை. 

ஒருவர் கேட்கப்படுகிறார் என்ற உணர்வு வந்தால்
அவருக்கு போராட வேண்டிய அவசியம் இருக்காது.

அவர்
அமைதியாகிறார்.
ஆரோக்கியமாகிறார்.
மென்மையாகிறார்.

மக்களுக்கு பேச இடம் கொடுத்தால்

அங்கே தான் குணமடைதல் தொடங்குகிறது.

இது சிகிச்சை மட்டும் அல்ல…
இது மனித வாழ்க்கையின் அடிப்படை.

உங்களுடன் பயணம் செய்கிறவர்கள் மனதளவில் மற்றும் உடலாலும் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களால் அவர்களுக்கு உதவ முடியும்.

Mehar Nithyan
Calmscious