கிராமத்தான்
Wednesday, July 24, 2024
எல்லோரிடம் கேட்டு பெறுவதற்கு
ஒரு எளிமையான பட்டியல்
என்னிடம் இருந்துக் கொண்டே இருக்கிறது
அது ஒருபோதும் அது கரைவதில்லை
ஏனெனில் அவர்கள் கேட்பதும் இல்லை
நானாய் சொல்லுவதுமில்லை.
பூமி.சாமி.
Tuesday, July 23, 2024
மேற்ப்பக்கம் ஒட்டாத தண்ணீர் தான்
அத்தாமரை இலையை தாங்கிப் பிடிக்கிறது.
பூமி.சாமி.
Saturday, July 13, 2024
வாழ்வில் இல்லாத
முடிச்சுகளை
போட்டும் அவிழ்த்தும்
பார்க்கிறது மனசு.
பூமி.சாமி.
Wednesday, July 10, 2024
உன் நினைவுகளுடன் தான்
நித்தம் நித்தம் நகருகிறது நாழிகை
உன் கனவுகளுடன் தான்
இரவில் கலைகிறது உறக்கம்
கற்பனையில் உன்னுடன்தான்
தித்திக்கிறது வாழ்க்கை
நிஜமாய் எதுவும் நடக்காது என்றபோதும்
உன் நினைவு என்பதும்
நிஜமாய் நீ என்பதும் ஒன்றுதான் எனக்கு.
பூமி.சாமி.
Sunday, July 7, 2024
சில அவசர வேலைகளை
சீக்கிரமாய் முடித்தேன்
சில வேலைகளை நாளைக்கு
தள்ளி வைத்தேன்
வெளியில் செல்லும்
வேலைகளை தவிர்த்து விட்டேன்
ஒரு வேளை உணவைக் கூட தவிர்த்தேன்
எல்லா நேரத்தையும்
உனக்குக்காய் எடுத்துக் கொண்டு
தொலைபேசியில் அழைப்பாய்
என காத்திருந்தேன்
கடைசிவரை அழைக்கவே இல்லை நீ.
பூமி.சாமி.
Friday, July 5, 2024
அவள்தான் தேவதை
நீ அழ வைத்தபோதும்
அவள் அன்பிலிருந்து மாறுவதில்லை
நீ எப்படி இருந்தாலும்
அவள் அக்கறையிலிருந்து அகலுவதில்லை
அவள் கஷ்டத்தில் இருந்தாலும்
உன் துன்பத்திற்கு தோள் கொடுக்க மறப்பதில்லை
தேவைதையை தேடி அலையாதே
தேவதைகள் எப்பொழுதும் தன்னை
தேவதையாய் உணர்வதே இல்லை.
பூமி.சாமி.
Saturday, June 29, 2024
இருக்கும்போதே கொண்டாடுவோம்
ஒருவருடைய
நற்குணங்களை
கண்டடைவதற்கும்
கொண்டாடுவதற்கும்
ஒரு விலை
தேவைப்படுகிறது
அது அவருடைய பிரிவு அல்லது இழப்பு.
பூமி.சாமி.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)