வயல் வரப்பில் அமர்ந்து
பனை ஓலை தொன்னையில்
தின்ன பழைய சோறு
அதற்கு தொட்டுக்காய்
சிறு தொன்னையில்
முருங்கை கீரை இட்டு சுண்டிய
பழைய குழம்பு
உளுந்து துவையல்
வறுத்த சுண்டை மிளகாய் வற்றல்
சொர்க்கத்தில் அமர்ந்து அமுதுண்ண
அற்புத தருணங்கள் இவை
பனை மரங்கள் அற்ற வீட்டு மனைகளாய் வயல்கள்
பழைய சோறுக்கு பதிலாய்
பலநாள் முன் அறைத்த இட்லி மாவு
வெட்ட வெளியிலிருந்து
வீட்டுக்குள் சுருங்கி போன நாம்
சொர்க்கத்தில் நரகத்திற்கு
கொஞ்சம் இடைவெளி தான்
அது பத்து இருபது ஆண்டுகள் தான்.
பூமி.சாமி.
-பூமி.சாமி.