கிராமத்தான்
Thursday, June 8, 2023
காலையில் நடைப்பயிற்சி
செய்கிறேன் நான்
என்னருகில் நடனப்பயிற்சி
செய்கிறது ஒரு மயில்
தன்னிடத்தே உள்ளதை வைத்து
தன்னை பேரழகாக்கி கொள்கிறது மயில்
தன் இயற்கை பேரழகை மறந்து
கண்டது கடையதை பூசி தன்னை அசிங்கமாக்கி கொள்கிறான் மனிதன்.
-பூமி.சாமி.
Tuesday, June 6, 2023
கோடை மழைப் போல்
எப்பொழுதாவது உன்
பதில் வரும் முன்பு
இப்பொழுது அது
பாலைவன மழைப் போல் ஆகிப்போனது ஏனோ.
-பூமி.சாமி.
உண்மையான அன்பு
சிலபேர் " உனக்கு சூடு சுரணை இல்லையா"
என்று என் காது படவே பேசுகிறார்கள்
எத்தனை முறை காயப்பட்டாலும்
அவமானப்படுத்தப் பட்டாலும்
அதையெல்லாம் மறந்து
நான் உன் முன் நிற்கிறேன்
சூடு சுரணை உள்ள மானஸ்தர்களை
பார்த்து நான் கேட்கிறேன்
" உண்மையான அன்பின் வலிமையை என்றாவது நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா" என்று.
பூமி.சாமி.
Sunday, June 4, 2023
அன்பு
நீ எனக்கு துன்பத்தை தந்தால்
நான் உனக்கு அன்பை தருவேன்
நீ என் மீது வெறுப்பை உமிழ்ந்தால்
நான் உன்மீது அன்பை உமிழ்வேன்
நீ என்மீது கோபத்தை காட்டினால்
நான் உன்மீது அன்பை காட்டுவேன்
நீ எனக்கு தீங்கு செய்தால்
நான் உனக்கு அன்பு செய்வேன்
நீ எதுவேண்டுமானாலும் செய்துவிட்டு போ
என்னிடம் அடுத்தவருக்கு கொடுக்க அன்பு மட்டுமே இருக்கிறது.
இதுவரை வாழ்ந்ததில் தெரிந்து கொண்டது
எண்ணம்
போல் தான்
வாழ்க்கை.
தவறு
நம் அன்பானவர்கள் செய்யும் தவறுகள்
திருத்தப்பட வேண்டும்
அல்லது
திருத்த முயற்சியாவது எடுக்க வேண்டும்
தவறை மறைத்து வைப்பத்தினால்
அத்தவறு அதிகமாகி அவரையும் அவர் சார்ந்தவர்களையும் அது அழித்துவிடும்.
Friday, June 2, 2023
நீ இவ்வளவு இன்னல்களை தந்த பின்னும்
உனக்கு சொல்வதற்கு நன்றிகள் உள்ளன என்னிடம்
நீ இவ்வளவு வெறுப்பை உமிழ்ந்தப்பின்னும்
உன்னிடம் காட்டுவதற்கு அன்பு இருக்கிறது என்னிடம்
நீ மோசமாக கோபபட்டபின்னும்
உன்னை பார்த்து புன்னகைக்க
மனம் இருக்கிறது என்னிடம்
நீ இவ்வளவு நடித்தபின்னும்
உன்னிடம் உண்மையான அக்கறையுடன்
இருப்பதற்கு காரணங்கள் உள்ளன என்னிடம்
நீ இவ்வளவு ஏமாற்றிய பின்னும்
எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது உன்னிடம்
-பூமி.சாமி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)