கிராமத்தான்
Saturday, April 15, 2023
உன் புன்னகை உலகின் புன்னகை
உன் உதடு புன்னகைக்க
உன் முகம் மலரும்
உன் முகம் மலர
உன் முன் உள்ள முகம் புன்னகைக்கும்
பின் உன்னை சுற்றி உள்ள முகங்கள் புன்னகைக்கும்
பின் ஊரே புன்னகைக்கும்
ஊரே புன்னகைக்க
உலகம் புன்னகைக்கும்
உன் உதட்டில் தோன்றி உலகத்தில் முடிகிறது ஒரு சிறு புன்னகை.
-பூமி.சாமி.
Thursday, April 13, 2023
உலகின் பழமையான மொழியும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழை தாய்மொழியாய் கொண்டு இருப்பதில்
பெருமை கொள்வோம்.
"அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ".
Monday, April 10, 2023
அந்த ஆசிரியரின் பெயரும் மறந்து விட்டது
முகமும் மறந்து விட்டது
ஆனால்
அவர் என் தோளைத் தட்டி சொன்ன " நல்லா பண்ணியிருக்கடா" என்ற வார்த்தைதான் இன்னும் மறக்காமல் என்னை ஒடவைத்துக் கொண்டு இருக்கிறது.
-பூமி.சாமி.
உறவுகள்
அன்று
எதிலும் கணக்கு பார்க்காத உறவுகள் இருந்தது
அது அன்பு ஆகட்டும் சண்டை ஆகட்டும்.
இன்று
எதிலும் கணக்கு பார்க்கும்
உறவுகள் தான் இருக்கிறது.
ஏன் ஒரு கணக்குகள் தான் உறவே இருக்கிறது
அன்று
கூட்டி கழித்து பார்த்தால்
கடைசியில் அன்பு மிஞ்சும்.
இன்று
கூட்டி கழித்து பார்த்தால்
கடைசியில் மிஞ்சுவது
வெறுப்பு போட்டி பொறாமை.
-பூமி.சாமி.
Sunday, April 9, 2023
ஒரு மலரை வாங்கிவிடுகிறேன்
அதன் பேரழகை வாங்க முடியவில்லை.
-பூமி.சாமி.
அப்ப அப்ப சண்டையிட்டு கொள்கிறோம்
காரணம் நானாகவே இருக்கிறேன்
மன்னிப்பது நீயாகவே இருக்கிறாய்
தோற்பது நம் ஈகோவாக இருக்கிறது
கடைசியில் ஜெயிப்பது நமது உண்மையான உறவாகவே இருக்கிறது.
-பூமி.சாமி.
Wednesday, April 5, 2023
நீ துன்ப படுகையில்
என் கரம் உன் கரம் பற்றி நடக்கும்
என் வார்த்தைகள் உன்னை தூக்கி நிறுத்தும்
என் விரல்கள் உன் கண்ணீர் துடைத்து தேற்றும்
உன் தோளோடு தோள் நிற்க எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன் நான்
புயலில் சாய நீ ஒன்றும் சாதா
மரமல்ல நீ ஆலமரம்
நாங்கள் அதன் விழுதுகள்.
-பூமி.சாமி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)