Sunday, December 25, 2022

அன்பு மகள் நேத்ராவுக்கு

 
மலராய் அழகாய் மலர்ந்து நிற்கும் 
பேரன்புமிக்க மகளே
குடும்பத்தின் முதல் குத்துவிளக்கு நீ
குணக் குன்று நீ
அன்பின் ஊற்று நீ
பாசத்தின் விளைநிலம் நீ
வெகுளித்தனத்தின் வெளிச்சம் நீ
அக்கறையில் தாய் நீ
எங்களின் நம்பிக்கை நீ
எங்களின் நேத்ரம் நீ

உன்னை மகளாய் பெற்றதில் பேருவகை
கொள்கிறோம்.

இந்நன்னாளில் உன்னை வாழ்த்தி
மகிழ்கிறோம்.






Thursday, December 22, 2022

இன்று என் பழைய மாணவ/மாணவிகள் எழுதிக் கொடுத்த feedback பேப்பரை படிக்க நேரம் கிடைத்தது.
மிக நெகிழ்வாக இருந்தது, 
மேலும் இனிமேல் வரும் மாணவர்களுக்கு உழைக்கும் சக்தியை அந்த வார்த்தைகள் கொடுத்தது.
உங்களின் அன்பும் ஊக்கப்படுத்தலும் தான் எங்களை மேலும் உழைக்க தூண்டுகிறது.
அனைவருக்கும் நன்றி.


Wednesday, December 14, 2022

Love and Affection should not only be done 
But also seen to be done.

-BoomiSaami

Tuesday, December 13, 2022

வலிந்து சேர்ந்திருத்தல்

இதுநாள் வரையில்
பிரிவு துன்பமே தரும்
என் நினைத்திருந்தேன்

ஆனால்

சில பிரிவுகள்
சுதந்திர சுவாசத்தையும் கொடுக்கவும் 
துன்பத்தை விலக்கவும் கூடும் என்றறிந்தேன் இன்று.

-சாமி.

Friday, December 9, 2022

மனதின்
இருளடைந்த பக்கங்களை
இரவும் இருளும்தான்
வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

-சாமி.

Tuesday, November 29, 2022

உன்னால் முடியும் நம்பு

முதலில் உன் மனத் தடைகளை உடை 
சக மனிதனால் முடியும் என்றால் உன்னாலும் முடியும் 

நீ உன் உழைப்பை தர முன் வந்தால் உலகம் உனக்கு பரிசு தர முன்வரும்

 உன்னை நம்பு 
உலகம் உன்னை நம்ப தொடங்கும்

 கடல் அலைகள் பாறைகளை கரைத்து விடுவது போல 
உன் தொடர் முயற்சி வெற்றியை கொண்டு வரும் 

உன்னை ஊக்கப்படுத்த எங்கள் விசில் சத்தம் எப்பொழுதும் கூட வரும்

 திட்டமிடு பயிற்சிபெறு 
 தினமும் செயல்படு திடமாக நம்பு வெற்றி பெறு.

வாழ்த்துக்கள்

-சாமி.

Monday, November 28, 2022