Thursday, July 14, 2022

இக்கடினமான நேரத்தில்
துறையின் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் நலம் விசாரித்த 
நலம் விரும்பிகளுக்கு நன்றி.

Monday, July 11, 2022

படித்ததில் பிடித்தது

_*முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கும்....*_ 


யாழினி என்பவர் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார். 

இளஞ்செழியன் என்பவர் அதே தூரத்தை கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.

இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் யாழினி என்றுதான் வரும்.

எனினும் இப்பொழுது யாழினி என்பவர் நன்கு பண்படுத்தப்பட்ட சாலையில் அந்த தூரத்தைக் கடந்தார் என்றும் 
இளஞ்செழியன் என்பவர் கரடுமுரடான பாதையில் அதைக் கடந்தார் என்றும் 
நான் சொன்னால் இப்பொழுது உங்களுடைய பதில் மாறும் அல்லவா?...

ஆம் நிச்சயமாக இப்பொழுது இளஞ்செழியன் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்!...

மறுபடி இப்பொழுது யாழினிக்கு 50 வயது என்றும் இளஞ்செழியனுக்கு 25 வயது என்றும் கூடுதல் தகவலை நான் கொடுக்கும் பொழுது........

உங்களுடைய பதில் மறுபடி மாறும் அல்லவா?..

ஆமாம் இப்போது யாழினி தான் வேகமானவர் என்று சொல்லுவோம்.

மேலும் இளஞ்செழியன் என்பவருடைய எடை 140 கிலோ என்றும் யாழினியின் எடை 65 கிலோ தான் என்று நான் சொல்லும்போது மீண்டும் இந்த பதில் மாறும். 

இப்பொழுது இளஞ்செழியன் தான் வேகமானவர் என்று சொல்லுவோம்! 

இதேபோல இளஞ்செழியன் பற்றியும் யாழினி பற்றியும் நம்முடைய இந்த முடிவானது அவர்களைப் பற்றிய அதிகத் தகவல்கள், கூடுதல் தரவுகள் கிடைக்கக் கிடைக்க மாறிக்கொண்டே இருக்கும். 

▪இதுதான் வாழ்க்கையிலும்.  நாம் ஒவ்வொருவரைப் பற்றியும் மிக வேகமாக நம்முடைய அபிப்பிராயங்களை உருவாக்குகிறோம். 

அவர்களோடும், அவர்களின் செயல்பாடுகளோடும் நம்மை ஒப்பிடத் தொடங்குகின்றோம். இதனால் நாம் நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்கின்றோம்.  

▪வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாகும். 

▪ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வேறுபட்டதாகும். 

▪ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் அறிவும் பொருளும் வேறாக இருக்கலாம். 

▪ஒவ்வொருவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறாக இருக்கலாம்.

▪அதற்கான தீர்வுகள் கூட வேறாக இருக்கலாம்!..

எனவே வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்றாகும். அதை தேவையில்லாமல் மற்றவர்களோடு ஒப்பிட்டு வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் தான் உயர்ந்தவர்கள்!...
நீங்கள் தான் சிறந்தவர்கள்!!...

உங்களுடைய முழு சக்தியையும் ஆற்றலையும் பிரயோகிக்க கற்றுக் கொள்ளுங்கள். 

உங்களுடைய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்து முன்னேறுங்கள்!! 

*எப்போதும் ஆரோக்கியமாக இருங்கள்!..* *அமைதியாக இருங்கள்!..*
*திருப்தி அடைந்தவராக இருங்கள்!!!..*
*புன்னகையைப் படர விடுங்கள்!..*
*மனம்விட்டு சிரிக்கப் பழகுங்கள்!!..* 

*சமுதாயத்திற்கும், இந்த மண்ணிற்கும் ஏதாவது சேவை புரிந்து கொண்டே இருங்கள்!!!..*

*வாழ்க பொருள் வளத்துடன்,மன நலத்துடன் என்றும்.



🌷🌷
காக்கையின் கரைதலும்
குயிலின் கானமும் 
இரண்டுமே
இயற்கையின் இனிமைதான்.

-சாமி.

Sunday, July 10, 2022

அன்பு

இக்கட்டான மருத்துவமனை நாட்கள்
நண்பர் வருகிறார் விசாரிக்கிறார்
ஒரு தொகையை பாக்கெட்டில் தினிக்கிறார்
தேவை மிகுந்த நாட்கள் அவை

இப்பொழுது அத்தொகையை
திருப்பி கொடுக்க முனைகிறேன்
முற்றிலும் மறுத்துவிட்டார்

இப்பொழுது அவரின்
அன்பின் முன்பு கடனாளியாகவும்
சமுதாயத்தின் முன்பு கடன் பட்டவனாகவும் நிற்கிறேன் நான்.


-சாமி.

Friday, July 8, 2022

என்னை அலட்சியப்படுத்துவதையே
லட்சியமாக கொண்டு இருக்கிறாய் நீ,
உன் அலட்சியத்தை கூட அங்கீகாரமாய் நினைக்கிறேன் நான்.

-சாமி.

Wednesday, June 29, 2022

தூரப் பராமரிப்பு

எனக்கும் உனக்கும்
கை கோர்க்கும் தூரம்தான் 

ஆனால்

உனக்கும் எனக்கும்
கண்ணுக்கு எட்டா 
தூரம் இருக்கிறது.

-சாமி.

Tuesday, June 28, 2022

ஏனென்றால் நீ மட்டுமே இருக்கிறாய் எனக்கு

"நீ எப்படி இருக்கிறாய்?"

"நீ சாப்பிட்டாயா?"

"நீ என்ன பண்ற?"

என்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமலும்.

"ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு"

" ரொம்ப கவலையா இருக்கு"

"ரொம்ப கஷ்டமா இருக்கு"

 போன்றவை உணர்வுகளுக்கு
நீ எதையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும்,

நானாய், உனக்கு பதில்களையும் கேள்விகளையும் உணர்வுகளையும் குறுஞ்செய்தி மழையாய் பொழிகிறேன்.

-சாமி.





.....
....
இப்படி