Wednesday, April 28, 2021

கொரோனா பெருந்துயரம்

உயிர்காற்று(ஆக்ஸிஜன்) உயிர் போனபின்
இயற்கையால் இலவசமாய் கிடைக்கிறது
பிணங்கள் ஏரிவதற்கு.


Thursday, April 22, 2021

கணக்கு பிணக்கு

வகுப்பில் இன்று மிக சரியாக
போடப்படும் கணக்குகள் யாவும்,
நாளை கூட்டி குறைத்து மிக
தவறாகப் காட்டுவதற்கான அச்சாரமே.

-சாமி.

வகுப்பு- வாழ்க்கை கணக்கு-பிணக்கு

வகுப்பில் கணக்கு சரியாக 
போட்டால்தான் மதிப்பெண்,
வாழ்க்கை கணக்கில் கூட்டி குறைத்து
தவறாகப் போட்டால்தான் மதிப்பெண்.

-சாமி.

Sunday, April 18, 2021

குடும்பம்

🇮🇳

*அமெரிக்கா நமக்குப் பாடமாக அமையட்டும்*

*வீடுகளில் சமைப்பது நின்ற அமெரிக்காவில் என்ன நடந்தது ?*

*1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்.*

*சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது,  வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், பாங்கும் அழிந்துவிடும்”  என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்.*

*அதாவது வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டு,*

*கடைகளில் வாங்கி கொள்ளும் பழக்கம் வந்தது இதனால் அவர்கள் எச்சரித்தபடியே பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்க குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்துவிட்டன.*

*அன்புடன் சமைப்பது என்பது பாசத்துடன் குடும்பத்தை இணைப்பது.*

*சமையல் கலை மட்டும் அல்ல. குடும்ப கலாச்சாரத்தின் மையப்புள்ளி.*

*சமையல் அறை இல்லாது, வெறும் படுக்கை அறை மட்டும் இருந்தால் அது குடும்பம் அல்ல, தங்கும் விடுதி தான்.*

*சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன?.*

*1971-ல் மொத்த குடும்பங்களில் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம்.*

*2020--ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது.*

*அன்று வாழ்ந்த குடும்பங்களாக இருந்தது இன்று தங்கும் வீடுகளாகிவிட்டது.*

*அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்;*

*ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்;*

*19 சதவிகிதம் வீடுகள் அப்பாவோ, அம்மாவோ மட்டுமே இருக்கும் வீடுகள்.*

*6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் ஆண்--பெண் சேர்ந்து தங்குமிடங்கள்.*

*இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன.*

*அதில் பாதி குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளுக்கு,*

*இந்த அலங்கோலத்தால் அமெரிக்காவில் 50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.*

*67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும்,*

*74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தாகின்றன.*

*வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல.*

*சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால்,*

*திருமணம் நிலை குலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா உதாரணம்.*

*அங்கு போல இங்கும் குடும்பங்கள் அழிந்தால் நமது பெண்ணுரிமைவாதிகள் கடைகளில் இனிப்பு வாங்கி வழங்கி கொண்டாடுவார்கள்.*

*குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும்.*

*வெளியில் சாப்பிடுவதால் உடல் ஊதிப்போகிறது.*

*ஏராள தொற்று வியாதிகள் வருகின்றன.*

*சேமிப்பும் குறைகிறது.*

*எனவே சமையல், சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல.*

*உடல் நலம் மன நலம் பொருளாதாரத்துக்கு கூட அவசியம்.*

*ஆதலால் தான் நம்  வீட்டில் பெரியவர்கள் ஹோட்டல்களில்,*

*கிளப்பு கடைகளில் சாப்பிடுவதை தவிர்த்தும், கண்டித்தும் வந்தனர்.*

*ஆனால் இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்...",*

*Swiggy, Zomato, uber eats போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும்,*

*மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடமும் நாகரீகமாகிக்கொண்டிருக்கிறது.,*

*இது ஒரு பேராபத்து...*

*நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அந்த ஆன் லைன் நிறுவனங்களே உளவியல் ரீதியாக தீர்மானிக்கிறார்கள்...*

*முன்பெல்லாம் நம் முன்னோர்கள்,*

*யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும் போதுகூட புளியோதரை மற்றும் தயிர் சாதங்களை கட்டிக் கொண்டு செல்வார்கள், ஆகையால்  வீட்டிலேயே சமையல் செய்யுங்கள்.*

*அனைவரும் சேர்ந்து உணவருந்துங்கள்.*

*காலையில் எறும்புக்கும்,*

*பகலில் காக்கைக்கும்,*

*இரவில் நாய்க்கும் உணவிடுங்கள்.*

*குடும்பமாய் இருங்கள்.*

*ஒற்றுமையாய் வாழுங்கள்...*

 *படித்ததில் பிடித்தது....*

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

Wednesday, April 14, 2021

Money Money Money

*Former Prime Minister of the United Kingdom, Winston Churchill, once said: "I took a taxi one day to the BBC offices for an interview*

*When I arrived, I asked the driver to wait for me for forty minutes until I got back, but the driver apologized and said, "I can't, because I have to go home to listen to Winston Churchill's speech*".

*I was amazed and delighted with the man's desire to listen to my speech! So I took out 20 pounds which was  huge money at the time  and gave it to the taxi driver without telling him who I was. When the driver collected the money, he said: "I'll wait for hours until you come back sir! And let Churchill go to hell*.
.......
*You can see how principles have been modified in favour of money; nations sold for money; honour sold for money; families split for money; friends separated for money; people killed for money; and people being made slaves for money*

Sunday, April 11, 2021

மாற்றங்கள்….!!மனங்களிலும்,குணங்களிலும்,வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும்

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்
சிலர் சென்று,
நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!

நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்…!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,

அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,

”எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?”

என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ”என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்’ என்றனர்.

”ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.

நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் ,

இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு
வந்து இதை சேர்த்து விடுங்கள்” என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,

எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!

புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!

இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்…!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது….. !

தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே…!என்றார்கள் .
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*

“பார்த்தீர்களா….?

பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,

அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே ,

*நாம் நமது
தவறான செயல்களையும்,
தீய பழக்கங்களையும் ,
துர் குணங்களை
மாற்றிக் கொள்ளாமல்*,

எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் ,

எந்த கோயிலுக்கோ ,
சர்ச்சுக்கோ,
மசூதிக்கோ,
குளத்துக்கோ,
புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்….

எந்த பயனும் வந்து விடப் போவதில்லை….??

……*மாற்றங்கள்….!!
மனங்களிலும்,
குணங்களிலும்,
வந்தால் தான்
வாழ்க்கை இனிமையாகும்….!!
என்றார் அந்த ஞானி….!*

 என்றும் அன்புடன் தமிழன்.🙏

Friday, April 9, 2021

எனவே எதையும் நம்பிக்கையுடன் தொடங்கு.

பெரும்பாலும் நாம் ஒரு செயலை செய்தபின்னர்தான் நம்மாலும் இதுபோல் சிறப்பாக செய்ய இயலும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது, 
இப்படி  ஏற்படும் நம்பிக்கை வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உத்வேகம் கொடுக்கும். எனவே அனுபவம் மூலம் கிடைக்கும் நம்பிக்கை மிகப் பெரிது. 

-சாமி.