Tuesday, January 28, 2020

மனிதன்

ஒரு செல்லில் தொடங்கி வளர்ந்த பரிணாமம், ஒரு செல்லில்(கைப்பேசி) முடங்கி கிடக்கும் பரிதாபம்.
 By சாமி.

Saturday, January 18, 2020

S RAMAKRISHNAN WEBSITE

http://www.sramakrishnan.com/?cat=85

website for teachers

http://www.teachersofindia.org/ta/teachers-development

Thursday, January 16, 2020

பூமியில் சொர்க்கம்

பூமியில் சொர்க்கம் எது எனக் கேட்டேன், இறைவன், உன் சொந்தஊர் என்றான். சரிகவி

ஆறறிவு உயர்திணை

'மாடு போல் உழை' ,  ' நாய் போல் நன்றியுடன் இரு',   ' கொக்கு போல் காத்திரு', 'காக்கை போல் ஒற்றுமையாக வாழ்', என்று கூற எவ்வளவோ இருக்க, 'மனிதன் போன்று  செய்' , என்று கூற ஒன்றுமே இல்லை எனினும், நாமே நம்மை அழைத்துக் கொள்வது ஆறறிவு உயர்திணை என்று.  சரிகவி.

தாய்

தலைப்பு : தாய்.                          இளமையில் ஒவ்வொரு வார்த்தையும் பழகுவதற்கு ஆயிரம் முறை அன்பாய் சொல்லிக் கொடுத்தவளுக்கு, முதுமையில் மறந்துவிட்ட பதிலுக்காக ஐந்து முறை கேட்கும் கேள்விகளுக்கு ஆயிரம் கோபம் வருகிறது நமக்கு.         By சரிகவி.

Tuesday, January 14, 2020

படித்ததில் பிடித்தது*:

*படித்ததில் பிடித்தது*:-
இன்றையப் பதின்ம வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது. ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.
   *கைப்பேசி* அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது. *ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது*.
   ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது. *எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை*.
   வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது. *சொந்தப் பெற்றோரிடம் மட்டும் தூக்கியடிப்பதுபோல பேசத்தான் முடிகிறது*.
   எந்த இடத்திலும் ஒரு நிமிடம் தாமதமானால் கோபம் கொப்பளித்துக் கொள்கிறது. ஆனால் அவர்களுக்காகக் காத்திருக்கும் *பெற்றோரின் வலி* புரிவதில்லை.
   எதைப் பெற்றாலும் உரிமையென எண்ணும் அவர்களுக்கு கடமைகளும் இருக்கின்றன என்பது ஒருபோதும் உரைப்பதில்லை.
                  ~ *இறையன்பு*