Thursday, January 16, 2020
ஆறறிவு உயர்திணை
'மாடு போல் உழை' , ' நாய் போல் நன்றியுடன் இரு', ' கொக்கு போல் காத்திரு', 'காக்கை போல் ஒற்றுமையாக வாழ்', என்று கூற எவ்வளவோ இருக்க, 'மனிதன் போன்று செய்' , என்று கூற ஒன்றுமே இல்லை எனினும், நாமே நம்மை அழைத்துக் கொள்வது ஆறறிவு உயர்திணை என்று. சரிகவி.
தாய்
தலைப்பு : தாய். இளமையில் ஒவ்வொரு வார்த்தையும் பழகுவதற்கு ஆயிரம் முறை அன்பாய் சொல்லிக் கொடுத்தவளுக்கு, முதுமையில் மறந்துவிட்ட பதிலுக்காக ஐந்து முறை கேட்கும் கேள்விகளுக்கு ஆயிரம் கோபம் வருகிறது நமக்கு. By சரிகவி.
Tuesday, January 14, 2020
படித்ததில் பிடித்தது*:
*படித்ததில் பிடித்தது*:-
இன்றையப் பதின்ம வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது. ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.
*கைப்பேசி* அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது. *ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது*.
ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது. *எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை*.
வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது. *சொந்தப் பெற்றோரிடம் மட்டும் தூக்கியடிப்பதுபோல பேசத்தான் முடிகிறது*.
எந்த இடத்திலும் ஒரு நிமிடம் தாமதமானால் கோபம் கொப்பளித்துக் கொள்கிறது. ஆனால் அவர்களுக்காகக் காத்திருக்கும் *பெற்றோரின் வலி* புரிவதில்லை.
எதைப் பெற்றாலும் உரிமையென எண்ணும் அவர்களுக்கு கடமைகளும் இருக்கின்றன என்பது ஒருபோதும் உரைப்பதில்லை.
~ *இறையன்பு*
பாசம்
பாசமும் ஒரு போதை வலை தான், வசமாக சிக்கிய பின்தான்,பாசம் பெரிதா சுதந்திரம் பெரிதா என்ற கேள்வி எழுகிறது. சரிகவி.
Sunday, January 12, 2020
பாரி வள்ளல்
சில நேரங்களில், முல்லை என்று நினைத்து முற்க்கொடிக்கு தேரை கொடுத்து விடுகிறோம். வள்ளலுக்கு எல்லா கொடியும் ஒன்றுதான், முற்க்கொடிக்கு எல்லா வள்ளலும் ஒன்றுதான்,குத்ததான் செய்யும்
By சரிகவி
Thursday, January 9, 2020
Subscribe to:
Posts (Atom)