Monday, December 9, 2019

ஓஷோ வைரங்கள்

*ஓஷோ வைரங்கள்*

எந்த செயலையும் உணர்வின்றி செய்யாதே !

தவறு செய்வதே வளரும் வழி !

வாழ்வே இருக்கும் ஒரே கடவுள் !

உன் தனித்தன்மைப் படி வாழு !

எல்லாவற்றையும் கொண்டாடு !

இறப்பு என்பது வாழ்வின் உச்சக் கட்ட அனுபவமே !

நம்பிக்கையில் வாழாமல் - உணர்ந்து வாழு !

குழந்தையாக அல்ல, குழந்தை போல மாறு !

எதையும் அமுக்கி வைக்காதே !

தனி மனித சுதந்திரமே வளர்ச்சிக்கு வழி !

தன் உணர்வோடு அனுபவி !

தன் உணர்வோடு கணத்துக்குக் கணம் வாழ் !

#ஓஷோ

Sunday, December 8, 2019

"என்ன கற்றுக் கொண்டோம்?...**என்ன கற்றுக் கொடுக்கிறோம்?..."*

*வாழ்க்கையே திசை திருப்பிய ஜெயகாந்தனின் படைப்பில் ஒரு சின்ன பதிவு*

*"என்ன கற்றுக் கொண்டோம்?...*
*என்ன கற்றுக் கொடுக்கிறோம்?..."*

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை...

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். 

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். 

ஒரு சமயம், 
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். 

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். 

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். 

அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். 

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். 

ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். 

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான்.  அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். 

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். 

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. 

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். 

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான்...  நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், *"அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!"* என கதறி அழுகிறான்.

ஆகவே நாம், *நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!*

நல்லதையே கற்றுத் தருவோம்...

மிக அருமையான பதிவு..👍👌👌
ஜெயகாந்தனின் படைப்பு

Friday, November 29, 2019

எது மகிழ்ச்சி

#ஒரு அழகான பெரிய பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண்,ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள், 

அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன். அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் சந்தோஷத்திற்கு வழி சொல்லுங்கள் என்றாள்."

கவுன்சிலிங் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்......

அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி மகிழ்ச்சியை வரவழைப்பது என்று சொல்ல சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..
" என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்லை.யாரிடமும் சிரிக்க முடியவில்லை. என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.....

இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழுது ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது.

வெளியே சில்லென்று மழை பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன். மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன். அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக வருடிக்கொடுத்தது.

கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்.நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு விஷய்ம் எனக்கு சந்தோஷமளிக்கிறது எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை மகிழ வைத்து நான் மகிழ்ந்தேன்.
இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி அவர்தம் மகிழ நானும் அதிகமகிழ்வுற்றேன்.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.
மகிழ்ச்சி என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்."

இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது. ஆனால் பணத்தால் வாங்க முடியாத விஷயம் அவளிடம் இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது
நீ
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்
என்பதில் இல்லை...
உன்னால் அடுத்தவர்
எவ்வளவு மகிழ்ச்சி ஆகின்றார்க்ள்
என்பதிலேயே இருக்கிறது...
மகிழ்ச்சி என்பது
போய் சேரும் இடம் அல்ல
அது
ஒரு பயணம்...
மகிழ்ச்சி என்பது
எதிர்காலம் இல்லை
அது நிகழ்காலம்...
மகிழ்ச்சி என்பது
ஏற்றுக்கொள்வது அல்ல
அது
ஒரு முடிவு...
நீ என்ன வைத்திருக்கிறாய்
என்பதில் இல்லை
மகிழ்ச்சி...
நீ
யார் என்பதில் தான் மகிழ்ச்சி !!!

மகிழ வைத்து மகிழுங்கள்........

Thursday, November 21, 2019

பிரார்த்தனை

#பிரார்த்தனை

ஒரு பெண் ஒரு கிளியை விலைக்கு வாங்கினாள். அதற்கு பிறகு மிகவும் கவலைப்பட்டாள்.  அவள் நல்ல விலை கொடுத்திருந்தாள். கிளி அழகாக இருந்தது. ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக இருந்தது.

அடிக்கடி அந்த கிளி உரக்க, “ நான் ஒரு கெட்ட பெண்மணி” என்று கூறியது.
இதில் ஏதோ விஷயம் இருக்கிறது . அந்தப் பெண் தனியாக வாழ்பவள். மிகவும் மதப்பற்றுள்ளவள்.

இந்த கிளி மீண்டும் , மீண்டும் ,”நான் மிகவும் கொடுமைக்காரப் பெண்” என்று கூறி கொண்டேயிருந்தது,....

அவள் பூசாரியிடம் சென்று “ இது மிகவும் மோசமானது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். கிளி மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன, இது ஒன்றைத் தவிர” என்று கூறினாள்.

பூசாரி சொன்னார் :

“ கவலைப்படாதே. என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளிகள் இருக்கின்றன. ஒன்று வழிபாடு செய்யும் ; மற்றொன்று மணியடிக்கும் . நீ உன் கிளியைக் கொண்டு வா, இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை விட்டுச் செல். நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும். பின்னர் உன் கிளியை எடுத்துச் செல்லாம் ! “

அந்த பெண்ணுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள் . பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் அவர்கள் எதுவும் பேசும்முன் அந்த கிளி கூறியது . “ நான் மிகவும் கொடுமைக்காரப் பெண் .”

பூசாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.

அப்போது வழிபாடு செய்து கொண்டிருந்த கிளி வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம் ,” முட்டாளே ! இன்னும் ஏன் மணியாட்டிக்கொண்டிருக்கிறாய் ? நம் பிராத்தனைகள் நிறைவேறி விட்டன “ என்று கூறியது . அவை ஒரு பெண்னுக்காகப் தான் பிரார்த்தனை செய்து வந்திருந்தன

ஓஷோ கூறுகிறார் :

“ யாராவது பிரார்த்தனை செய்வதைப் பார்த்தால் ஏதோ தவறு நடக்கிறது என்று உண்மையில் சந்தேகப்படு. அவர்கள் பணத்துக்காக, பெண்ணுக்காக, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை. மகிழ்ச்சிதான் அவன் வழிபாடு , அதைவிட உயர்ந்த சிறந்த வழிபாடு இருக்க முடியாது, “

Tuesday, November 19, 2019

MACHINE LEARNING

https://machinelearningmastery.com/types-of-learning-in-machine-learning/

Tuesday, November 12, 2019

வேலை

"ஒரு ஊரில் மூன்று பேர் வேலை 
செய்து கொண்டிருந்தார்கள்!!!

அப்போது அங்கு வந்த 
ஒரு வழிப்போக்கர் முதல் நபரிடம், “நீ இங்கே என்ன  செய்து 
கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். 

அந்த நபர் நிமிர்ந்து பார்த்து, 
“பார்த்தால் தெரியவில்லையா?
நான் கல் கொத்திக்கொண்டு இருக்கிறேன்..உனக்கு என்ன கண் குருடா?” என்று கேட்டார்.

உடனே அந்த நபர் அடுத்தவரிடம் சென்று  “நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார்.

அவர் உடனே நிமிர்ந்து பார்த்து, “ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக செய்கிறேன்.

அவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைச் செய்வேன், அவ்வளவுதான்” என்று சொன்னார்.

அடுத்து அவர் மூன்றாவது நபரிடம் சென்று, “நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்,” என்று கேட்டார். 

அதற்கு அந்த மூன்றாவது நபர் மிகவும் ஆனந்தமாக எழுந்து நின்று, “நான் இங்கே ஒரு அழகான கோவிலை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்” 
என்று சொன்னார்....

அவர்கள் எல்லோருமே ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அந்த ஒரே வேலையை மூன்று பேருமே  மூன்று விதமாக உணர்கிறார்கள்!

அதற்கேற்றார் போல்தான் அவர்கள் வாழ்க்கையின் தன்மையும் அமைகிறது.

 எனவே, எளிமையான செயல் செய்கிறீர்களா.... அல்லது மிகவும் கடினமான செயல் செய்கிறீர்களா.... என்பதைவிட,

செய்யும் வேலையை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான்...
உங்கள் வாழ்க்கைத் தன்மையை நிர்ணயிக்கிறது!!!

#ஓஷோ

Saturday, October 19, 2019

STAY CONNECTED

*This poem is beyond all relationships*
*But made for us all*

​**When I'm dead.*
​**Your tears will flow*
​**But I won't know*
​**Cry with me now instead!​*

​**You will send flowers*,..​
​**But I won't see*
​**Send them now instead*

​**You'll say words of praise,..​*
​**But I won't hear..​*
​**Praise me now instead!​*

​**You'll forget my faults,....​*
​**But I won't know.....​*
​**Forget them now, instead!​*

​**You'll miss me then,...​*
​**But I won't feel...*
​**Miss me now, instead​*

​**You'll wish...​*
​**You could have spent more time with me,...​*
​**Spend it now instead!​*

​**When you hear I'm gone, you'll find your way to my house to pay condolence but we haven't even spoken in years....​*
​**Pls look for me now!!​*

​''**Spend time with every person around you, and help them with whatever you have to make them happy!! your families, friends, acquaintance.....​
​**Make them feel Special. Because  you never know when time will take them away from you forever''..​*

​**Love  all   and   Forgive all.​*
​No matter how many times the teeth bite the tongue, they still stay together in one mouth. That's the spirit of​
   FORGIVENESS
​Even though the eyes don't see each other, they see things together, blink simultaneously and cry together.​
  that's "UNITY."
​May we practise the spirit of forgiveness and togetherness.​
1.  Alone I can 'Say' but together we can 'Talk'.
  2.  ​Alone I can 'Enjoy' but together we can 'Celebrate'  
  3.  ​Alone I can 'Smile' but together we can 'Laugh'_
   ​That's the BEAUTY of Human Relations. We are nothing without each other​
   STAY CONNECTED!!
​DestinyAheadCare​
​QUOTE OF THE MONTH​

​The razor blade is sharp but can't cut a tree; the axe is strong but can't cut the hair.​

MORAL:
​Everyone is important according to his/her unique purpose. Never look down on others unless you are admiring their shoes​

🙏🙏 ​Share it with your friends and family including me​