Monday, June 17, 2019

கழுகு

காட்டிற்குப் போன #வேட்டைக்காரன் ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தான்.

அதை தன் வீட்டில் அடைக்காக்கும் #கோழிக்கூட்டில் வைத்தான். கொஞ்ச நாளில் குஞ்சிகள் வெளிவந்தன.

கழுகுமுட்டையும் குஞ்சானது. மற்ற கோழிக்குஞ்சுகளோடு இந்த கழுகு குஞ்சும் சேர்ந்து திரிந்தது. க்யா.. க்யா என கத்தியது. அவைகள் குப்பைகளைக் கிளறி புழுப் பூச்சிகளைப் பிடித்து தின்றதைப் போலவே இதுவும்தின்றது. வருடங்கள் ஓடின. எல்லாக் குஞ்சுகளும் வளர்ந்து பெரிதாயின.

#கழுகுகுஞ்சுகளும் வளர்ந்து கழுகு ஆனது. ஆனால் தன்னை கழுகு என்று நினைக்காமல் கோழி என்றே நினைத்தது.

ஒரு நாள் எல்லாக் கோழிகளும் குப்பைமேட்டில் மேய்ந்து கொண்டிருந்த்ன. மேகங்கள் இல்லாத நீல வானத்தில் வெகு உயரத்தில் ஒரு பறவை இறக்கைகளைலாவகமாக கன கம்பீரமாக தரையைப் பார்த்தபடி பறந்துக் கொண்டிருந்தது.

இதை கவனித்த இந்த கழுகுக்கோழி "அடடா...! என்ன அழகான கம்பீரமான பறவை..!மேலே பார் என்றது. பக்கத்தில் இருந்த கோழி, அதன் பெயர் #கழுகு! பறவைகளின் ராஜா..!

அது போல் பறக்க ஆசைப்படாதே!
ஒரு நாளும்பறக்க முடியாது... என்றது கேலியாகதான் யார் என்பதை உணராது தன் பிறவியையே மறந்து போன இந்த கழுகுகோழி கப்சிப் என பேசாமல் இருந்துக்கொண்டது.

பின் அது ரொம்பநாள் வரையிலும் மற்றக் கோழிகளை போலவே இருந்து கடைசியில் இறந்தது.

தன்னைப்பற்றி அது உணர்ந்து இருக்குமானால், அதுவும் மற்ற கழுகுகளைப் போல வானத்தில்,உயரத்தில் பறவைகளின் #ராஜாவாக பறந்திருக்கலாம்.

#மனிதர்களிலும் ரொம்ப பேர் இப்படித்தான் #தன்_திறமை_உணராது சாதாரண மனிதர்களாகவே வாழ்ந்து தனக்கும், மற்றவர்களுக்கும் #உபயோகமில்லாமல் வாழ்ந்து மறைகிறார்கள்...!

Sunday, June 9, 2019

பிரச்சினைகளை எளிதாக கடந்து செல்வது எப்படி?!

பிரச்சினைகளை எளிதாக கடந்து செல்வது எப்படி?!

வரும் பிரச்சினைகள் கண்டு ஓட வேண்டாம்.ஒளிய வேண்டாம்.

அது ஓடினால் துரத்திக் கொண்டே வரும்.ஓளிந்தால் உங்கள் மனதின் அடி ஆழத்தில் சென்று அது ஒளிந்து கொள்ளும்.

பிரச்சினைகளை எதிர் கொண்டு அதை வரவேற்று அதற்கு வாழ்த்து சொல்லுங்கள்.

அது உங்கள் விழிப்புணர்வை மேலும் கூர்மையாக்கும்.

பிரச்சினைகளின் வேர்களை விசாரியுங்கள்.அது விழுதுகள் விடுவதை தவிர்க்கும்.

பிரச்சினைகளின் உணர்வுகளை உள்வாங்கி அதை அசைபோட்டு நன்கு அனுபவியுங்கள்.

அந்த உணர்வுகளோடு உறவாடுங்கள்.அதனோடு கலந்து உறவாடி இரண்டறக் கரைந்து விடுங்கள்.

பிரச்சினைகளும் கரைந்து காணாமல் போய் விட்டதை உங்களால் உணர முடியும்!!!

#ஓஷோ

Friday, May 31, 2019

மனித உடல்*

*இதுதான் இறைவன் இயங்கும் நமது மனித உடல்*

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள
மூலப் பொருள்கள் (தனிமங்கள்)

1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர,
மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.

மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய்விடுகிறது.

கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை
சுமார் 5 லட்சம்.

உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம்.

இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.

விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை.

தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை,
இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின்,
3 பவுண்டு கால்சியம்,
20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ்,
10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு
ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என
பல பொருட்கள் உள்ளன!!

உடலின்மொழி.

1.  உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.  உடல் - தண்ணீரை கேட்கும் மொழி  - தாகம்

3.  உடல்  - ஓய்வை கேட்கும் மொழி  - சோர்வு, தலைவலி

4.  உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.  உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.  உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -  வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.  உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.  உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.  உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.

உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.

       நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.

*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

Thursday, May 30, 2019

மனித அறிவு இவ்வளவுதானா ?

படித்து ரசித்த ஒரு அருமையான கதை

ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில்
பல மாணவர்கள் படித்து வந்தனர்.

ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக
இருந்தனர் .
அதில் ஒரு மாணவன் எல்லோரையும்
விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான்.

ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும்
புதிய புதிய காரியங்களைக் கற்றுக்
கொண்டான் . இதனால் அங்கிருந்த
அனைத்து மாணவர்களிலும் அவனே
சிறந்தவனாகத் திகழ்ந்தான் .

ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட
அன்பும் , கவனமும் செலுத்தினார்.

சிறிது காலம் சென்றது. அவனிடம்
பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன.
அவன் எல்லோரையும் ஏளனமாக
நோக்க ஆரம்பித்தான்.

தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட
மதிப்பதில்லை
பலருக்கு மத்தியில்
மூத்த மாணவர்களிடம் கடினமாகக்
கேள்வி கேட்டு,

அவர்கள் விடை
தெரியாமல்
விழிப்பதைப் பார்த்து
கைகொட்டிச் சிரித்து,
அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி
செய்யத் தொடங்கினான்.

ஆசிரியரின் காதுகளுக்கு இந்த
விஷயம் எட்டிவிட்டது. இந்த
அகம்பாவம் அவனை அழித்து
விடும் என்பதை உணர்ந்தார்.

ஒரு நல்ல மாணவன் நாசமாவதை
அவர் விரும்பவில்லை.

அவனது பிழையை அவனுக்கு
உணர்த்த விரும்பினார். நேரடியாக
அறிவுரை சொன்னால் அவன் கண்ணை
மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே
கூட எதிர்த்துப் பேசக் கூடும்.
வேறொரு வழியை யோசித்தார்.

மறுநாள் அவனை அழைத்தார்.
"மகனே ! இன்று அதிகாலையில்,
பக்கத்து கிராமத்தில் உள்ள என்
நண்பர் ஒருவர் இறந்து விட்டார்.

அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக்
குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட
நூல்களை எழுதியவர்.
பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த
அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் .

பல அயல் நாடுகளிலும் கூட இவரது
மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத்
தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய்
விவரத்தைச் சொல்லி ஒரு தரமான
சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல் .

இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத்
தேவைப் படுகிறது. இதை உன்னால்
மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் "
என்றார் .

கடைசியாக அவர் அவனை
உயர்த்திச் சொன்ன வார்த்தைகள்
அவனை மிகவும் உற்சாகப்படுத்தி
விட்டன.

''இதோ உடனே செய்து முடிக்கிறேன்
ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி
வீட்டுக்கு விரைந்தான்.

ஆசாரி அவனை வரவேற்று அவன்
வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும்
மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி
வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான்.

ஆசாரி இறந்து போனவரைக் குறித்த
விபரங்களைக் கேட்டார்.

அவனும் ஆசிரியர் சொன்னபடியே

" அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக்
குடித்தவர்.

இரு நூறுக்கு மேற்பட்ட
நூல்களை எழுதியவர்.

பத்து முறை
அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான
விருதினைப் பெற்றவர்.

பல அயல்
நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள்
உண்டு."

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி
சூடாகி விட்டார்.

"ஏன்டா ! இன்னிக்கு நீ
பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா ?

செத்த பிணத்தோட விவரம் சொல்லாம
வேறென்னமோ உளர்றியே! நீ
படிச்சவன்தானா ? " என்றார்.

இந்தக் கேள்வி அவனை ஆத்திர
மூட்டியது " அவரைப் பத்தி இவ்வளவு
சொல்லியும் புரியலைன்னு சொன்னா
நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.

ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே !
என்னதான் படிச்சிருந்தாலும்,
விருதெல்லாம் வாங்கி இருந்தாலும்
எனக்கு அது பிணந்தான்.

எனக்கு
வேண்டியது அதோட உயர, அகலந்தான்.
நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல
உசிரு இருக்கிற
வரைக்கும் தான்.

உனக்குப்
பெட்டி வேணும்னா மரியாதையா
போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்

எங்கோ பளீரென்று அடி விழுந்தது
அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ?

இதுக்காகவா இத்தனை பேரை
அவமானப்படுத்தினேன் ? "
அவமானம் பொங்கியது .
கூனிக் குறுகியபடியே ஆசியரின்
முன்னால் போய் நின்றான் .

ஆசிரியர் சிரித்துக் கொண்டே
கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி
அடிச்சாச்சா " .

அவன் பதில் சொன்னான்.
"அடிச்சாச்சு. என்னோட தலை
கனத்துக்கு ".

ஆசிரியர் சொன்னார்:
செல்லமே ! என்னதான் படித்தாலும்
இது அழியப் போகிற சரீரந்தான்.
இதை உணர்ந்து மனத்தாழ்மையாய்
நடப்பதே உண்மையான ஞானம்

Saturday, May 25, 2019

சார்லஸ் பிராட்லா

சார்லஸ் பிராட்லா பிரிட்டனில்
மிகவும் போற்றத்தக்க நாத்திகர்.
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத்
தேர்வு செய்யப்பட்டார்.அவருக்குப்
பதவிப் பிரமாணம் செய்தபோது
கடவுளின் சாட்சியாக என்று
சொல்லி பதவிஏற்குமாறு கூறி
னார்கள்,இல்லாத கடவுளை நான்
சாட்சிக்கு அழைத்துவர முடியாது
என்றுகூறி மறுத்துவிட்டார்.உங்க
ளுக்கு நம்பிக்கை இருக்கிறதா
இல்லையா என்பதைப்பற்றி எங்க
ளுக்கு கவலையில்லை,இந்த அவை
நம்புகிறது இந்தநாட்டின் அரசியல்
சாசனம் நம்புகிறது அதற்கு கட்டுப்
பட்டவர் நீங்கள் எனவே கடவுள்
சாட்சியாக என்றுகூறித்தான் நீங்கள் பதவிப்பிரமாணம் எடுக்க
வேண்டும் அதற்கு நீங்கள் மறுப்பீர்
களேயானால் உங்கள் தேர்வு ரத்து
செய்யப்படும் என்றார்கள்.இந்த
அவையின் ஆயுள்காலம் ஐந்து
வருடங்கள்தான் இந்த ஐந்து வருடங்
களுக்காக என்ஆயுள்முழுவதும் கட்டிக் காக்கும் என்கொள்கைகளை
விட்டுவிடமுடியாது என்தேர்வை
நீங்கள் ரத்துசெய்ய விரும்பினால்
தாராளமாக நீங்கள்ரத்து செய்து
கொள்ளுங்கள் என்றார் பிராட்லா
அவர்தேர்வை ரத்துசெய்தார்கள்.
அவருடைய தொகுதிக்கு மீண்டும்
தேர்தல் நடந்தது மீண்டும் பிராட்லா
போட்டியிட்டார் மீண்டும் வெற்றி
பெற்றார் மீண்டும் அதேபிரச்சனை.
எனக்கென்று ஒருகொள்கை ஒரு
நம்பிக்கை இருக்கிறது அதை எந்தக்
காரணத்திற்காகவும் என்னால் விட்
டுத்தர இயலாது என்று திட்டவட்ட
மாக மறுத்துவிட்டார் பிராட்லா.
மீண்டும் அவர்தேர்வு ரத்து செய்யப்
பட்டது.முன்றாவது முறையாக அவர்
தொகுதிக்குத் தேர்தல் நடந்தது
மூன்றாவது முறையும் போட்டியிட்
டார் மற்ற இரண்டுமுறைை வாங்கிய வாக்குகளைவிட இம்முறை அதிகவாக்குகள் வித்தி
யாசத்தில் வெற்றிபெற்றார் பிராட்லா
இம்முறை கெஞ்ச ஆரம்பித்தார்
கள் தயவுசெய்து பிடிவாதம் பிடிக்
காமல் இந்தஅவையின் வேண்டு
கோளை ஏற்றுக்கொள்ளுங்கள்
என்றார்கள்,பிராட்லா மிகவும்
உறுதியாகச் சொன்னார் நான்யார்
என்கொள்கைகள் என்ன என்பதை
த் தெரிந்து கொண்டுதான் என்
தொகுதிமக்கள் என்னை மீண்டும்
மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
என்தேர்வை ரத்துசெய்வதன் மூலமாக என்னை தேர்ந்தெடுத்த
மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்
அவர்களுடைய ஜனநாயக உரிமை
களை இழிவு செய்கிறீர்கள் அவர்
களுடைய தன்மானத்திற்கே சவால்
விடுகிறீர்கள் என்றுகடுமைகாட்டிய
பிராட்லாஇதற்குமேல் பேச என்னி
டம் எதுவுமில்லை என்றுகூறி அமர்ந்துவிட்டார்.இந்தமுறை பிரிட்டன் பாராளுமன்றம் பணிந்தது கடவுளின்
பெயரால் பதவிஏற்பவர்கள்  கடவுளின்
பெயராலும் மனட்சாட்சியின்பெயரால்
பதவி ஏற்பவர்கள் மனசாட்சியின் பெய
ராலும் பதவிஏற்கலாம் என்று பிரிட்டன்
அரசியல் சட்டமே திருத்தப்பட்டது.
இன்று பகுத்தறிவுவாதிகள் மனட்சாட்சி
யின் பெயரால் பதவி ஏற்பதற்கு
சாரலஸ் பிராட்லாதான் காரணம்.
மதுரை பாலன் முகநூல் பதிவு

Tuesday, May 21, 2019

உனக்குள்ளே ஒரு புதையல்

*உனக்குள்ளே ஒரு புதையல்*

ஒரு புதிய ஊரினுள் புத்தர் வந்திருந்தார். அங்கு தனது போதனைகளை வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது சீடன் ஒருவன் புத்தரை நோக்கி ஒரு கேள்வி கேட்டான்

“குருவே! உலக மக்களின் வாழ்க்கை யாவும்  ஒன்றோடு ஒன்று வேறுபட்டது. வறியவன் வாழ்வில் சிரமப் படுகிறான், செல்வந்தனோ வசதியாக இருக்கிறான். ஆனால் இருவருமே வாழ்வில் தேடுவது மகிழ்ச்சியாகவே இருக்கிறதே ஏன்?”

புத்தர் அந்த சீடனைப் பார்த்து புன்னகையுடன்,

“நான் உனக்கொரு கதை சொல்கிறேன் கவனமாகக் கேள்.” என்றார்.

“சொல்லுங்கள் குருவே!” என்றான் சீடன்.

புத்தர் தொடங்கினார்,

“ஒரு ஊரில், ஒரு தெருவோரத்தில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவ்வூர் மக்களிடம் இரந்து உண்ணும் அவன், தான் தங்கி, உண்டு, உறங்கும் இடத்தை மிகவும் அசுத்தமாக, கடந்து செல்வோர் முகம் சுளிக்கும்படி வைத்திருந்தான்.  தெருவில் செல்வோரிடம் கையேந்துவான், பொருளோ, உணவோ கிடைத்தால் மகிழ்வான், ஏதும் கிடைக்கவில்லை என்றால் துக்கத்தில் உழல்வான். ஒரு நாள் அவன் வாழ்வின் கடைசி நாளாக அமைந்தது, இறந்தான். அவனை அப்புறப் படுத்திவிட்டு அவன் தங்கியிருந்த நாற்றம் பிடித்த இடத்தை சுத்தம் செய்ய முனைந்தார்கள் தெரு மக்கள். கூட்டிப் பெருக்கியும் நாற்றம் சகிக்கவில்லை, அவன் படுத்திருந்த இடத்தில் அரையடி வரை தோண்டி, மண்ணை அப்புறப்படுத்தினார்கள். நாற்றம் ஒழிந்தது. அவர்கள் தோண்டிய இடத்தில் ஏதோ ஒரு பொருளும் ஒளிர்ந்தது. அப்பொருளை எடுத்துப் பார்த்த மக்கள், அது பொற் புதையல் என அறிந்ததும் அதிசயித்தனர். ஒரு புதையல் தனக்கடியே இருந்தது தெரியாமல் வாழ்க்கை முழுதும் இரந்து உண்டானே அந்த பிச்சைக்காரன் என எண்ணி வியந்தனர்.”

என்று தனது கதையை முடித்தார் புத்தர்.

“நான் கேட்ட கேள்விக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? புரியவில்லையே குருவே!” என்றான் சீடன்.

புத்தர் விளக்க ஆரம்பித்தார்,

“இந்த கதை ஏதோ ஒரு ஊரில் வாழ்ந்த பிச்சைக்காரனின் கதை அல்ல. வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடும் அனைவரின் கதையும் இதுவே. மனிதன் மகிழ்ச்சியை வெளியில் உள்ள ஒரு பொருளிடமோ அல்லது மற்றொரு மனிதனிடமொ தேடுகிறான். ஆனால் அவனுக்கு எல்லையற்ற மகிழ்வைத்தரும் பொருள் அவனுள்ளேயே இருப்பதை அறியாமலேயே உலக வாழ்வை முடிக்கிறான்.

நீ கூறிய, வறியவனின் வாழ்வும், செல்வந்தனின் வாழ்வும் அடிப்படையில் வேறுபட்டதல்ல. அந்த வறியவன் செல்வந்தனானாலும், அந்த செல்வந்தன் செல்வாதி-செல்வந்தன் ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியை தேடிக்கொண்டேதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தேடுவது வெளியில்.

உன் உள்ளே இருக்கும் மனதை உன்னால் எல்லையற்ற அமைதியில் வைக்க முடிந்தால், அவ்வமைதி கொடுக்கும் ஆற்றலுக்கும் ஆனந்ததிற்கும் அளவே இராது.” என்று முடித்தார் புத்தர்.

Saturday, May 18, 2019

study material for various competitive exams

Students of the University of Mumbai - have prepared a website - where all the study material for various competitive exams like U.P.S.C, M.P.S.C, I.B.P.S, P.S, S.S.C, N.D.A, C.D.S, R.B.I, Railways, etc. is provided free of cost.

http://upscfever.com/upsc-fever/index.html