உன் உதவிகள் ஏதும் தேவைப்படுவதில்லை
என்னை ஊக்கப்படுத்தும்
உன் வார்த்தைகளுக்கு கூட வேலையில்லை
துன்பங்களில் கண்ணீர் துடைக்கும்
உன் கரங்கள் கூட தேவைப்படுவதில்லை
காலமும் தூரமும் கொஞ்சம் நஞ்சம்
இருந்த உன் நினைவுகளைக்கூட பிடுங்கிக் கொண்டன
ஏதும் தேவையில்லாத போது
நீ எதற்கு என்று
ஞாபகமாய் மறந்து விட்டேன் உன்னை.
-பூமி.சாமி.