Showing posts with label நிம்மதிக்கு நல்லது பூமி.சாமி. Show all posts
Showing posts with label நிம்மதிக்கு நல்லது பூமி.சாமி. Show all posts

Thursday, May 8, 2025

என் நிம்மதிக்கு நல்லது

சில நேரங்களில் உங்களை பற்றி 
நினைக்கும்போது 

உங்களுக்காக அவ்வளவு உழைத்து 
இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது
 
உங்கள் மேல் அவ்வளவு அக்கறையை
காட்டி இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது 

உங்களுக்காக என்னை வருத்தி இவ்வளவு மெனக்கெட்டு இருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது 

என் செய்வது நான் அப்படித்தான் 

ஆனால் உங்களுக்காக என்னை மாற்றி கொண்டால்
ஒவ்வொருத்தருக்காகவும் என்னை மாற்றி கொள்ள வேண்டும் 

உங்களை ஏற்றுக்கொள்ளவும் இல்லை 
எதிர்க்கவும் இல்லை 
அப்படியே கடந்து செல்கிறேன் 
அதுதான் என் நிம்மதிக்கு நல்லது.

-பூமி.சாமி.