Friday, May 31, 2024

யார் யாரையோ
யாருக்குள்ளோ
தேடுவது தான்
இங்கு பிரச்சினை.

பூமி.சாமி.


Thursday, May 30, 2024

அலட்சியத்தை எல்லாம் அடுக்கி
வைத்துக்கொள்கிறது அறிவு

அடுத்தமுறை உதவி என்று
கேட்டால் அலட்சியம் செய்ய
வேண்டும் என நினைக்கிறது அறிவு

உதவி என்று குரல் வருகிறது
அலட்சிய அடுக்கின் மேல்
முதல் ஆளாய் ஏறிநின்று உதவ முனைகிறது மனசு.

பூமி.சாமி.


Wednesday, May 29, 2024

பசுமை
பாடல்கள் 
பஸ்
பயணம்
அதிகாலை.

இதைவிட
வாழ்வில்
என்ன
இருக்கிறது.

பூமி.சாமி.

Sunday, May 26, 2024

அன்பின் சொல்படி கேட்பதும்
அடிமையாய் இருப்பதும் 
வேறு வேறு.

பூமி.சாமி‌

Saturday, May 25, 2024

நாம் நம் குழந்தைகளுக்கு
முகமூடிகள் தயாரிப்பதிலும்
அதை அணிவிப்பதிலும்
முன்புறமாய் இருக்கிறோம்
ஏனெனில்
நமது உண்மை முகம்
சில நேரங்களில் குழந்தைகளின்
குணங்களில் செயல்களில் வெளிப்பட்டுவிடுகிறது.

பூமி.சாமி.
நம்மில் சிலர்
பணம் சொத்து சேர்க்கையில்
பாவங்களையும் சேர்த்தே சம்பாதிக்கிறோம்
பிறகு
பாவங்களை போக்க
பணத்தை செலவழித்து
பணம்தான் கரைந்ததே ஒழிய
பாவங்கள் கரையாமல்
சந்ததிகளிடம் சேர்ந்ததுதான்
மிச்சம்.



விவரம் தெரியாத மக்கு
ஒன்றும் தெரியவில்லை
என்று பலமுறை திட்டி இருப்போம்
வெள்ளந்திகளை

ஆனால்  எனக்கு ஒன்றும் மட்டும்
புரியவில்லை
கடவுள் ஏன் எப்போதும் அவர்கள் பக்கமே இருக்கிறார்  என்று.

-பூமி.சாமி.