Sunday, May 3, 2026

அன்பை வெளிப்படுத்த 
ஆயிரம் வழிகள் உள்ளது என்னிடம்
அவையனைத்தும் உன்னால் 
புரிந்து கொள்ள முடியா
வழிகளாய்தான் இருக்கிறது என்பதில்
ஒவ்வருத்தமும் இல்லை எனக்கு 
கொடுப்பதுதான் என் வேலை 
புரிந்து கொள்வது உன் வேலை.

-பூமி.சாமி.

Saturday, May 2, 2026

நமது வாழ்க்கை என்பது 
நமக்கு நடப்பவை அல்ல 
நமக்கு நடப்பதை எவ்வாறு உணர்கிறோம்
அதற்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறோம்
அதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம்
என்பதே.
எனவே நம் வாழ்க்கை நம் கையில்தான் 
இருக்கிறது.

-பூமி.சாமி.

Thursday, April 23, 2026

நன்றி மறத்தல்

நமக்கு கிடைத்த 
அன்பை
அக்கறையை
உதவியை
காலத்தை காரணம் காட்டி 
கடந்தும் மறந்தும் போகுகிறது மனசு.

-பூமி.சாமி.

Tuesday, March 31, 2026

நீ அன்று என் கரங்களை
உதறிய வேளையில் 
நம் காதல் நம்மை இருக்கமாய்
பிடித்து கொண்டது.

-பூமி.சாமி.

Saturday, March 28, 2026

YOU VALUE THEM INFINITY 
THEY VALUE YOU ZERO
FINALLY YOUR RELATIONSHIP BECOME ZERO.

Friday, February 27, 2026

மலையிலிருந்து இறங்கியவுடன் 
நினைவுகள் எல்லாம் 
ஏறி அமர்ந்து கொள்கிறது
மனதில்.

-பூமி.சாமி.
சில நேரங்களில் 
இருப்பவைகளையும்
இருப்பவர்களையும்
தாண்டி 
இல்லாதவர்களையும்
இல்லாதவைகளையும்
நினைத்து கணக்கிறது மனசு.

-பூமி‌.சாமி.