கிராமத்தான்
Friday, July 5, 2024
அவள்தான் தேவதை
நீ அழ வைத்தபோதும்
அவள் அன்பிலிருந்து மாறுவதில்லை
நீ எப்படி இருந்தாலும்
அவள் அக்கறையிலிருந்து அகலுவதில்லை
அவள் கஷ்டத்தில் இருந்தாலும்
உன் துன்பத்திற்கு தோள் கொடுக்க மறப்பதில்லை
தேவைதையை தேடி அலையாதே
தேவதைகள் எப்பொழுதும் தன்னை
தேவதையாய் உணர்வதே இல்லை.
பூமி.சாமி.
Saturday, June 29, 2024
இருக்கும்போதே கொண்டாடுவோம்
ஒருவருடைய
நற்குணங்களை
கண்டடைவதற்கும்
கொண்டாடுவதற்கும்
ஒரு விலை
தேவைப்படுகிறது
அது அவருடைய பிரிவு அல்லது இழப்பு.
பூமி.சாமி.
Thursday, June 27, 2024
ஒரு இறப்பு செய்தி
அவரை தெரிந்த வாட்ஸ்அப் குழுவில்
போட்டேன்
ஒருவர் RIP போட்டார்
இன்னொருவர் ஸ்மைலியோடு நின்றார்
மற்றொருவர் விபரம் கேட்டார்
இன்னொருவர் வருத்தப்படுவதாய் சொன்னார்
சிலர் மட்டும் மாலையோடு
மலர் அஞ்சலி செய்ய
பல பேர் இதற்கும்
நமக்கும் சம்பந்தம் இல்லை
என இருந்து விட
நம் இறப்புக்கு பின்னும் என்ன
நடக்கும் என்பதை அறியும்
மந்திரசக்தி வந்து விட்டது
எனக்கு.
பூமி.சாமி.
Wednesday, June 26, 2024
என் நேரத்தை கொஞ்சமாய் கொஞ்சமாய்
உடைத்து ஒவ்வொருக்காய்
கொடுக்கிறேன்,
நான் கொடுப்பவர்கள்
எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட கொடுக்காதவர்கள் தான்,
எனினும் கொடுப்பது தான்
என் வழக்கம்
யாசிப்பது அல்ல.
பூமி.சாமி.
Sunday, June 23, 2024
எல்லாம் சம்பிரதாயத்திற்காக
சொல்லி சொல்லி
மனப்பூர்வமாக
சொல்லுவது எப்படி என்பது
மறந்தே போய்விட்டது எனக்கு.
பூமி.சாமி.
ஆம் இல்லை க்கு
இடையில்
மௌனம்
என்று ஒரு பதில்
இருக்கத்தான்
செய்கிறது
அது
பலநேரங்களில் நமக்கு
வசதியாய்
இருக்கிறது
எப்பக்கமும்
சாய்ந்து விட
ஏதுவாய்
இருக்கிறது.
பூமி.சாமி.
Wednesday, June 19, 2024
போ போ எங்கு சுற்றினாலும்
இங்குதானே வரவேண்டும்
என்று சொல்லி சிரிக்கிறது
இடுகாடு.
பூமி.சாமி.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)