Sunday, February 25, 2024

அன்புக்கு பதில் அன்பு மட்டும் இல்லை
வெறுப்புக்கு பதில் வெறுப்புதான் என்றில்லை
எந்த பதிலானலும் உண்மை இருக்கட்டும் எந்த வேசமும் வேண்டாம் 
விஷமே ஆனாலும் கலப்படம் வேண்டாம்.

பூமி.சாமி.



இயல்பாய் இருந்து விடுங்கள்

நல்ல பெயர் எடுக்க 
அதிபுத்திசாலி தனமாய் 
செய்யும் செயல்கள்
எடுத்துக் கொடுக்கிறது
கெட்டப் பெயரை.

பூமி.சாமி.

Saturday, February 24, 2024

அப்பா
அம்மா
கணவன்
மனைவி
பிள்ளைகள்
உடன்பிறந்தவர்கள்
யாரேனும் தியாகத்தின்
 உருவமாக உன் வாழ்வில் இருக்கக்கூடும்
அவரை இழந்து விடாதே
அவர்தான் இந்த உலகம்
உனக்கு கொடுத்த உன்னத
பரிசாக இருக்கக்கூடும்.

பூமி.சாமி.

Thursday, February 22, 2024

கல்லூரி முடித்து
ஒரிரு வருடம் கழித்து 
மாணவர்கள் தொலைபேசியில்
அழைப்பதுண்டு

ஒருவர் கேட்பார்
மதிப்பெண்
பட்டியல் வந்துவிட்டதா என்று

மற்றொருவர் கேட்பார் 
பட்டமளிப்பு விழா எப்போதென்று

இன்னொருவர் கேட்பார்
ஏதாவது வேலை வாய்ப்பு
இருந்தால் சொல்லுங்கள் என்று

இதுவரை ஒருவரும் கேட்டதில்லை
" தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்" என்று

-பூமி.சாமி.

Tuesday, February 13, 2024

பிடிவாதமாய் இருந்து
நான் வெற்றி பெறும் போதெல்லாம்
நம்மிடையே உள்ள உறவு 
தோற்று போகிறது.

-பூமி.சாமி.

Sunday, February 11, 2024

மின் கம்பி -தத்துவம்

முத்தமிட்டது 
யார் என்பது
பிரச்சினை இல்லை
உயிர்ப்போனது என்னவோ
பறவைக்கு தான்.

பூமி.சாமி

Friday, February 9, 2024

அறிவால் அறிந்தது எல்லாம்
நினைவில் இல்லை
மனதால் உணர்ந்ததை எல்லாம்
மறக்க முடியவில்லை.

பூமி.சாமி.