Tuesday, July 4, 2023

நேரம்

பணம் கொடுத்து ஏமாறுவது போல் 
நாம் சில நபர்களிடம் நம் நேரத்தை கொடுத்து ஏமாறுகிறோம்

ஒருவருக்கு நம் நேரத்தை கொடுக்கிறோம் என்றால்
நமக்கும் அவருடைய நேரம் கிடைக்க வேண்டும் 
இல்லையென்றால் 
நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள் 

நமது நேரம் சாதாரணமல்ல
நம் வாழ்வின் பகுதி 
பணம் இழந்தால் திரும்ப சம்பாதித்து விடலாம் 
நேரத்தை இழந்தால் இழந்தது தான்

 எனவே உங்களது நேரத்தை சரியான  நபருக்கு கொடுங்கள்
சரியான இடத்தில் முதலீடு செய்யுங்கள்.


-பூமி.சாமி.

Saturday, July 1, 2023

எண்ணங்கள் கொஞ்சமேனும்
நல்லதாக இருக்கட்டும்

இல்லையேல்

முகமூடிகள் கழண்டு விழும்போது
முகம் கொடூரமாக இருக்கக்கூடும்.

-பூமி.சாமி.

Thursday, June 29, 2023

பக்கத்துல வாழும் போது
உன் அருமை தெரியல
உன் அருமை தெரியும் போது
பக்கம் நீ இல்லை.

-அயோத்தி படப்பாடல்
மனதில் கந்தக அமிலத்தை
சுமந்து அலையும் காந்தாரி
அது உன்னை எரித்து
சுற்றத்தையும் சுட்டெரிக்கும் 
என்பதை அறிவாயா?

-பூமி.சாமி.

Tuesday, June 27, 2023

மனசாட்சி இல்லா மனிதர்கள்

மரநிழலில்
மது விருந்து
மணலில்
மது புட்டிகளின் உடைந்த சில்லுகள்
காலணி நம்மால் அணிய முடியும்
கால்நடைகளால் அணிய முடியுமா.

-பூமி.சாமி.


Thursday, June 22, 2023

சொல்லப்படாத வார்த்தையும்
வலி ஏற்படுத்துகிறது,
குறுஞ்செய்திக்கு பதிலில்லை.

பூமி.சாமி.

Thursday, June 8, 2023

காலையில் நடைப்பயிற்சி
செய்கிறேன் நான்
என்னருகில் நடனப்பயிற்சி
செய்கிறது ஒரு மயில்
தன்னிடத்தே உள்ளதை வைத்து
தன்னை பேரழகாக்கி கொள்கிறது மயில்

தன் இயற்கை பேரழகை மறந்து
கண்டது கடையதை பூசி தன்னை அசிங்கமாக்கி கொள்கிறான் மனிதன்.

-பூமி.சாமி.