கிராமத்தான்
Tuesday, September 21, 2021
காத்திருக்கிறேன் கதிரவனே
ஒன்று உன் செங்கதிரை நான் பற்றி
ஏறி வரவேண்டும்,
இல்லையேல்,
என் கரம் பற்றி நீ இறங்கி வர வேண்டும்,
காத்திருக்கிறேன் கதிரவனே
உன்னுடன் ஒரு செல்ஃபி எடுக்க.
-சாமி.
இங்கு எல்லோரும்
தற்கொலைதான் செய்து கொள்கிறார்கள்,
தவணை முறையில்.
கவிஞர் பிரான்ஸிஸ் கிருபா.
Monday, September 20, 2021
கொரானா காலம்
இப்பொழுது
தாடிகள் தப்பிக்கிறது
முக கவசத்தின் கருணையால்.
-சாமி.
Saturday, September 18, 2021
நன்றி
நன்றி செய்தவருக்கு வாலாட்டுகிறது ஐந்தறிவு,
நன்றி செய்தவரிடமே வாலாட்டுகிறது ஆறறிவு.
-சாமி.
Friday, September 17, 2021
அக்கறை-ஏமாற்றம்
அக்கரையில் அக்கறை
இக்கரைக்கு ஏமாற்றம்.
-சாமி.
யார் சொல்லியிருந்தாலும்
எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும்
உன் புத்திக்கும்
பொது அறிவுக்கும்
பொருந்தாத எதையும் நம்பாதே.
தந்தை பெரியார்.
Thursday, September 16, 2021
முன்னேற்றம்
முன்பெல்லாம் புறக்கணிப்பை முகசுழிப்பு மற்றும் வார்த்தைகள் மூலம் தெரிந்து கொண்ட நாம் இப்பொழுது " Chat Texting" லேயே தெரிந்து கொள்வது தான் முன்னேற்றம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)