குடும்பம் ,ஒற்றுமை ,பாசம், அன்பு , அக்கறை எல்லாவற்றையும் நாம் பேசுவோம், நமது சுயநலம் பாதிக்காதவரை.
ஒத்திபோடுவதை ஒத்திபோடும் நாளே, உன் வெற்றிக்கு ஒத்திகை பார்க்கும் நாள்.
பக்கத்தில் இருக்கும் உதவியவனுக்கு
நன்றி உணர்வை காட்டமறந்த நான்,
பஸ் ஏறி ரயிலேறி
கோயில் கோயிலாய்
நேர்த்திகடன் செலுத்தினேன்
கணவனே கண் கண்ட தெய்வம் ,
பக்தை சொல்வதை தெய்வம் கேட்க்கும்வரை.
ஆண்கள் எல்லோர்க்கும் தாயே முன்னறி தெய்வம்,
திருமணம் ஆகும்வரை.
உடன் பிறந்து தனிமையாய் இருப்பதைவிட
தனிமையாய் பிறப்பதே மேல்.
மனிதனைவிட
மரம் மேலானது
மன அமைதிக்கு.