Sunday, December 31, 2023

படித்ததில் பிடித்த கவிதை

அவர்கள் 
அப்படித்தான் 

தேவை தீர்ந்ததும்
அழுக்கு ஆடைகளைக் களைவதுபோல 
உன்னையும் 
களைந்து செல்ல 
அவர்களுக்கு 
அப்படியொன்றும் சிரமமாய் இருக்காது 

உன் இடத்திற்கு இன்னொருவரை கொண்டு வருவதும்
உனக்கானப் பிரியங்களை பிறிதொருவருக்கு பங்கிடுவதும்
உனக்கேயான உரிமைகளை உனக்கில்லையென மறுப்பதும்
அவர்களால் 
இயன்ற காரியம்தான்

அவர்கள் 
அப்படித்தான்
எல்லாவற்றுக்கும் 
ஒரு மாற்றீடு 
வைத்தே இருக்கிறார்கள்

பின்னும்
நீதான் 
உடைந்த கண்ணாடிச்சில்லுகளைப் சேகரித்துக்கொண்டிருக்கிறாய்
எப்படியும் ஒட்ட வைத்திடலாமென 

வேண்டாம் விடு
உடைத்து உடைத்து ஒட்ட வைத்திட்டப் பொருள்களால்
வீடே அலங்கோலமாகி விட்டது
பார்

-ரிஸ்கா முக்தார்-

No comments:

Post a Comment