Tuesday, April 25, 2023

நன்றி நவில்வோம்

வான் மேகங்கள் பெய்யாமல் நீர் சுமந்து அலைவது போல்
சொல்லாத பல நன்றிகளுடன் மனம் சுமந்து அலைகிறேன் நான் 

நான் தவறுகள் செய்த போது அன்பாய் குட்டி அக்கறை காட்டிய அம்மாவுக்கு

அடிக்காமல் கண்ணால் கண்டிப்பையும் சொல்லிக் காட்டாத அன்பையும் தந்த அப்பாவுக்கு

 கையைப் பிடித்து அகரம் எழுத வைத்த ஆசானுக்கு

எப்பொழுதும் என் அருகில் என்னை காத்து நிற்கும் கடவுளுக்கு 

இப்படி பல சொல்லாத நன்றிகளை மனம் சுமந்து அழைகிறேன் நான்

என் குறைகளை பொறுத்து என்னை தாங்கிக் கொள்ளும் குடும்பத்துக்கு

உடுக்கை இழந்தவன் கை போல் வந்து நிற்கும் உறவுகளுக்கு 

என் கோபத்திற்கு பதிலாய் புன்னகையை கொடுத்து தோள் கொடுக்கும் நட்புக்கு 

அன்பையும் மரியாதையையும் நவிழும் என் மாணவர்களுக்கு

இப்படி சொல்லாத பல நன்றிகளுடன் மனம் சுமந்து அலைகிறேன் 

காலையில் என்னை கரைந்து எழுப்பும் காக்கைக்கு 

எப்பொழுது சென்றாலும் என் தோள் மீது ஏறி விளையாடும் நாய்க்குட்டிக்கு

தடுக்கி விழும்போதெல்லாம் என்னை தாங்கிப் பிடிக்கும் தாய் பூமிக்கு

என் மனம் எல்லாம் நிறைந்து கிடக்கும் மரங்களுக்கு

முழு கவலையில் இருக்கையில் அதை முழுவதுமாய் கரைத்து விடும் முழு நிலவுக்கு 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்  மனமுழுவதும் கொட்டிக்கிடக்கிற சொல்லப்படாத நன்றிகளை

 மேகங்கள் நீரை கொட்டினால் பூமி குளிரும்
நன்றிகளை நவில்ந்திட மனங்கள் குளிரும்.

-பூமி-சாமி.

No comments:

Post a Comment