Monday, August 29, 2022

நான் கைக்காட்டும் இடத்தில் இருப்பதால்

நம் முன்னே இரு பாதைகள்,
ஆதி அழகாய் கவர்ந்திழுக்கும் ஒன்று,
ஆதி கரடு முரடாய் கடினமான ஒன்று,
அழகான பாதையில் கூட்டம் முண்டியடிக்கிறது,
கரடு முரடில் ஓரிருவர்,
ஆதி அழகில் மயங்கிய சிலர் மீதி வாழ்வை இழந்த கதை பல,
அக்கதை தெரிந்ததனால்
நான் எப்பொழுதும் கைகாட்டும் பாதை கரடு முரடு,
சிலர் பின்பற்றினர்
முதல் கரடு முரடாய் முடிவு  மகிழ்வாய் அழகாய் நிறைவாய்,
பின்பற்றாதவர் பலர்
 ஆதி அழகாய் அந்தம் பதராய் இருளாய் துயராய்,
கேட்பவர் கேட்கட்டும் என் கை மட்டும் அதே திசையை நோக்கி.

-சாமி.

No comments:

Post a Comment