உண்மை சம்பவம்
காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?
*தர்மம் தலையை மட்டுமல்ல...ஒரு நாட்டையே காப்பாற்றும்*
1892 ஆம் ஆண்டு. *அமெரிக்காவில்* உள்ள ஸ்டான்ஃபோர்ட் *பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன்* அவன்.
அவனுக்கு உற்றார் உறவினர் *எவரும் இல்லை*. தன்னுடைய *படிப்பிற்கான கட்டணத்தை* கட்ட கூட அவனுக்கு *வசதியில்லை*.
அவனும் அவன் *நெருங்கிய நண்பன் ஒருவனும்* சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
பிரபல *இசைக் கலைஞர்* ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு *இசை நிகழ்ச்சி* நடத்தி அதன் மூலம் இவர்கள் *படிப்பிற்கு தேவையான நிதியை* திரட்டுவது என்று முடிவானது.
அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் *உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய* போலந்து நாட்டை சேர்ந்த பியானோ *இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை* சந்தித்து தேதி கேட்டார்கள்.
அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் *அவருக்கு $2000 தரவேண்டும்”* என்று கூற, இவர்களும் *சந்தோஷமாக* ஒப்புக்கொள்கிறார்கள்.
*பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி* என்பதால் இவர்கள் அந்த *நிகழ்ச்சியை* சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து *அல்லும் பகலுமாக* நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு *உழைக்கிறார்கள்.*
நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. *அந்த நாளில் எதிர்பாராதவிதமாக* நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி *டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை*. ஆகையால் அரங்கம் *நிரம்பவில்லை.* அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்?
*மனதை* திடப்படுத்திக்கொண்டு *பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி*, நிகழ்ச்சியை *ரத்து செய்து* விடலாம் என்கிறார்கள்.
ஆனால் *பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார்.* “நான் திட்டமிட்டபடி *நடத்தியே தீருவேன்*” என்கிறார்.
ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் *அவரிடம் $1600 கொடுத்து*, “இது தான் மொத்தம் *வசூலான தொகை*. மீதியுள்ள தொகைக்கு *முன் தேதியிட்டு செக்* கொடுத்து
விடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். *பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்”* என்று கூறி *கெஞ்சியபடி* அவரிடம் *பணத்தையும் காசோலையையும் கொடுக்க*, அதை வாங்கி *காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி* அவர்கள் கொடுத்த தொகையை *அவர்களிடமே கொடுத்து* “நீங்கள் எனக்கு தரவேண்டிய *கட்டணத்தை தரவேண்டாம்.* அதை தள்ளுபடி செய்கிறேன்.
*இந்த பணத்தை* வைத்துக்கொண்டு *உங்கள் படிப்புக்கான கட்டணத்தை* கட்டுங்கள்”. என்கிறார்.
*அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.*
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் *சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும்* இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.
பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் *அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை* அந்த சம்பவம் உணர்த்தியது.
ஆனால் பேட்ரெவ்ஸ்கி, *“நான் உதவாவிட்டால்* இவர்களுக்கு வேறு *யார் உதவுவார்கள்?* இவர்களுக்கு உதவுவதால் *நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…”* என்று கருதியே அந்த உதவியை செய்தார்.
*ஆண்டுகள் உருண்டன.*
*பேட்ரெவ்ஸ்கி* காலப்போக்கில் மேலும் *புகழின் உச்சிக்கு* சென்று ஒரு கட்டத்தில் *போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே* ஆகிவிட்டார்.
மிகப் பெரும் தலைவராக விளங்கி *நல்லாட்சி* நடத்தி வந்தார். ஆனால் *துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர்* துவங்கிய காலகட்டம் அது. *போலந்து நாடு போரின் பிடியில்* சிக்கி சின்னாபின்னமானது. *போர் முடிவுக்கு* வரும் தருவாயில் *மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில்* உழன்றனர். எங்கும் *பஞ்சம்* தலைவிரித்தாடியது.
*இது 1918 ஆம் ஆண்டு.*
எப்படி நிலைமையை சமாளிப்பது? *பசியோடிருக்கும் தன்* லட்சக்கணக்கான *மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது?* கலங்கித் தவிக்கிறார் *பேட்ரெவ்ஸ்கி*.
கடைசியில் *அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை* அணுகுகிறார். *(American Relief Administration ARA)*. அதன் *தலைவராக* இருந்தவர் *ஹெர்பெர்ட் ஹூவர்* என்பவர்.
*(இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)*
*பேட்ரெவ்ஸ்கி* கேட்டுக்கொண்டதையடுத்து *அமெரிக்காவின் உதவிக்கரம்* போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு *ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள்* அனுப்பப்பட்டன.
அதன் மூலம் சுமார் *1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்*.
ஒரு பேரழிவு மற்றும் *பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர்*.
பேட்ரெவ்ஸ்கி *நிம்மதி பெருமூச்சுவிட்டார்*.
தான் கேட்டவுடன் தன் *மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய* அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) *தலைவரை நேரில் சந்தித்து நன்றி* சொல்ல விரும்பினார் *பேட்ரெவ்ஸ்கி*.
*ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து* கண்கள் பணிக்க *நன்றி* தெரிவிக்கிறார்.
*“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது*. நீங்கள் செய்த *உதவியை தான் நான் உங்களுக்கு* திருப்பி செய்தேன்.
உங்களுக்கு *நினைவிருக்கிறதா?* 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே *கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட* உங்கள் நிகழ்ச்சியை *இலவசமாக* நடத்திக்கொடுத்து *உதவினீர்கள்* அல்லவா?அந்த *மாணவர்களில் ஒருவன் தான் நான்”* என்கிறார் *ஹெர்பெர்ட் ஹூவர்*.
*பேட்ரெவ்ஸ்கி* கண்கள் *கலங்கியபடி* *அவரை அணைத்துக்கொள்கிறார்*.
*காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.*
தனிப்பட்ட *ஒருவருக்கு செய்த *உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே* பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?
*இந்த உலகில்* நீங்கள் எதை *விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு* அறுவடை செய்வீர்கள்.
ஏனெனில்…… *விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை!*
பலன் கருதாமல் *பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி* இது. ஆனால் *காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..*
காலம் குறித்து வைத்துகொண்டது....
*(உண்மை சம்பவம்)*.
தர்ம சிந்தனையை பற்றி
*குழந்தைகளுக்கு* சொல்லி
கொடுங்கள்
குழந்தைகள் சொல்வதை கேட்பதில்லை ஆனால் செய்வதை பார்ப்பார்கள்
வாழ்க *தர்மம்* செய்து. 🙏🙏🙏
No comments:
Post a Comment