Friday, June 2, 2023

நீ இவ்வளவு இன்னல்களை தந்த பின்னும்
உனக்கு சொல்வதற்கு நன்றிகள் உள்ளன என்னிடம் 

நீ இவ்வளவு வெறுப்பை உமிழ்ந்தப்பின்னும்
உன்னிடம் காட்டுவதற்கு அன்பு இருக்கிறது என்னிடம் 

நீ மோசமாக கோபபட்டபின்னும் 
உன்னை பார்த்து புன்னகைக்க
மனம் இருக்கிறது என்னிடம்

நீ இவ்வளவு நடித்தபின்னும்
உன்னிடம் உண்மையான அக்கறையுடன்
இருப்பதற்கு காரணங்கள் உள்ளன என்னிடம் 

நீ இவ்வளவு ஏமாற்றிய பின்னும் 
 எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது உன்னிடம் 

-பூமி.சாமி

மனம்

மனதை குத்தி காயப்படுத்த 
ஒரு நொடியும் ஒரு வார்த்தையும்
போதுமாய் இருக்கிறது

ஆனால் 

அதை ஆறுதல் படுத்த
ஆயிரம் வார்த்தைகளும் ஆயிரம் மணி நேரமும் தேவைப்படுகிறது.


-பூமி.சாமி.

Wednesday, May 31, 2023

இலக்கு  முக்கியமல்ல
இலக்கை நோக்கி போகும் பயணம்  முக்கியமானது.

பூமி.சாமி.


Tuesday, May 30, 2023

முன்பெல்லாம் வாழ்க்கையில்
ஆங்காங்கே நடிப்பு இருக்கும்

இப்பொழுது நடிப்பிற்க்குள்
ஆங்காங்கே வாழ்க்கை இருக்கிறது.


Sunday, May 28, 2023

மறதியைப்போல் மாமருந்து இல்லை


வயது அதிகமாக
மனம் மென்மையாகும் 
காயங்கள் அதிகமாகும்
அதை மறக்க
மறதி அதிகமாகும்.

பூமி.சாமி


Monday, May 22, 2023

தூரத்திலேயே இருந்து கொள்கிறேன்
நீ கானல் நீர் ஆகுவது தெரிகிறாய்
அருகில் வந்தால் காணாத நீராகிறாய்.

-சாமி.

Monday, May 15, 2023

மூட்டை மூட்டையாய் முகமூடிகளை
தூக்கி அலைகிறோம்
முகத்தை மறைத்துக் கொள்ள.

-பூமி.சாமி.