Tuesday, March 28, 2023

உன் மீது நான் வைத்திருப்பது உலகப் பெரு பிம்பம்,
அது உடைந்து போகையில் நானும் உடைந்து போகிறேன்.

உனது அக்கறை கரையில்லாத கடல், அதில் கறை காண்கையில் கலங்கித் தான் போகிறேன்.

என் தவறை பலமுறை மன்னித்த உன்னை,
ஒருமுறை மன்னிக்க மனமில்லாமல் கலங்கி நிற்கிறேன்.

உன்மேல் மலைபோல் வைத்திருந்த நம்பிக்கை மண்ணாகி போனதனால்
உன்னை மன்னிக்ககூட முடியவில்லை இந்த முறை,
என்னை மன்னித்து விடு மறுபடியும்.

-பூமி.சாமி

Sunday, March 26, 2023

பணம் இருக்கிறது
பரிகாரம் செய்ய
என்று பாவம் மேல் பாவம் 
செய்பவர்களை
என்ன செய்ய

-பூமி.சாமி.


Friday, March 24, 2023

உண்மை!

சண்டாளி! உன் வசந்தத்தால் 
எனக்கு இலையுதிர் காலம்.

-கவிக்கோ அப்துல் ரகுமான்.

Thursday, March 23, 2023

அடிமேல் அடி
வலிமேல் வலி
மனம் கலங்கத்தான் செய்கிறது

துயரங்களை சொல்ல வார்த்தை இல்லாமல் மௌனம் ஆவதும்

துயரங்களை பகிரும் செவிகளை இழப்பதும்

துயர நேரங்களில் சாயும் தோள்களை
தொலைப்பதும்

ஆறுதல் கூறும் 
மனங்கள், மறுப்பதும்

துயரத்தின் மேல் துயரம்.


-பூமி.சாமி.
ஆயிரம் வார்த்தைகள்
தராத ஆறுதலை அளிப்பது
அதிகாலை அழுகை.

-பூமி.சாமி

Tuesday, March 21, 2023

மனிதர்கள் என்னை ஒதுக்கி
தள்ளினாலும்
 என்னோடு கூட்டு சேர்வதற்கு இங்கு சில குருவிகளும் மரங்களும் இருக்கின்றன
அவைகள் என்னை ஒருபொழுதும் புறந்தள்ளுவது இல்லை.

-பூமி.சாமி‌

Sunday, March 19, 2023

சில சமயங்களில், 
என் சொல்லிலும் செயலிலும்
ஒட்டிக் கொண்டு வந்து விடுகிறது
மன எண்ணத்தில் உள்ள அழுக்கு.


பூமி.சாமி.